fbpx

செம பிசினஸ்.. கோழி பண்ணை அமைக்க ஆர்வமா? எவ்வளவு செலவாகும்..? முழு விவரம் உள்ளே..

சுயதொழிலில் ஈடுபட்டு வருமானம் ஈட்ட சிறந்த வழிகளில் ஒன்று, கோழிப்பண்ணை அமைப்பதாகும். குறைந்த முதலீட்டில் குறுகிய காலத்தில் வருமானத்தை தரக்கூடியது கோழி வளர்ப்புத் தொழில். அதிலும்  நாட்டுக்கோழி வளர்ப்பை மேம்படுத்தவும், அதில் ஈடுபட உள்ளோருக்கு வழிகாட்டவும் தமிழக அரசு பல்வேறு சலுகைகள், மானியம் உள்ளிட்டவற்றை வழங்கி ஊக்குவித்து வருகிறது. இந்த பதிவில் கோழி பண்ணை அமைக்க எவ்வளவு செலவாகும், தேவையான ஆவணங்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்..

கோழி பண்ணை அமைக்க எவ்வளவு செலவாகும்? கோழிகளை வளர்ப்பதற்கான கொட்டகை, உபகரணங்கள், தீவனத் தட்டு, 4 மாதங்களுக்கான தீவனம் என ஒரு பண்ணை அமைக்க 3,13,750 ரூபாய் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. இதில் 50 சதவீதம் அதாவது 1,56,875 ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது. கோழிப்பண்ணை அமைப்பதற்கான எஞ்சிய பங்களிப்புத் தொகையை சொந்த நிதி ஆதாரங்கள் மூலமாகவோ, வங்கி கடன் மூலமாகவோ திரட்டி கொள்ளலாம்.  ஒவ்வொரு பயனாளிக்கும், 4 வார வயதுடைய 250 நாட்டுக்கோழிக் குஞ்சுகள் ஓசூரில் உள்ள மாவட்ட கால்நடைப் பண்ணையில் இருந்து இலவசமாக வழங்கப்படுகிறது. 

கோழி பண்ணை அமைக்க இடம் ; கோழிக்கொட்டகையை அமைக்க குறைந்தபட்சம் 625 சதுரஅடி நிலம் சொந்தமாக இருக்க வேண்டும். பண்ணை அமைவிடம், மனித குடியிருப்புகளில் இருந்து தள்ளியிருக்க வேண்டும். பண்ணை அமைய உள்ள இடத்திற்கான சிட்டா, அடங்கல் நகல் வைத்திருக்க வேண்டும். பயனாளி அதே கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். பண்ணைக்கு மின் இணைப்பு இருக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள் : கோழிப்பண்ணை அமைக்க விரும்புவோர், அருகிலுள்ள கால்நடை மருந்தகங்கள், கால்நடை உதவி மருத்துவர்களை அணுகி விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை நகல், பண்ணை அமைக்கவிருக்கும் இடத்தின் சிட்டா, அடங்கல் நகல், 50 சதவிகித நிதி ஆதாரங்களுக்கான ஆவணங்கள், 3 ஆண்டுகளுக்கு பண்ணையை பராமரிப்பதற்கான உத்தரவாதக் கடிதம் உள்ளிட்டவற்றை இணைக்க வேண்டும். 

Read more ; வங்கக் கடலில் நாளை உருவாகிறது புயல்..!! சென்னையில் கரையை கடக்கிறதா..? இந்திய வானிலை ஆய்வு மையம் பரபரப்பு தகவல்..!!

English Summary

How much does it cost to set up a chicken farm and what are the required documents can be seen in this post..

Next Post

அதி கனமழை எச்சரிக்கை எதிரொலி..!! டெல்டா மாவட்டங்களுக்கு விரைந்த பேரிடர் மீட்புப் படை..!!

Tue Nov 26 , 2024
Monitoring officers have rushed to these 5 districts to monitor rescue and relief operations in Thanjavur, Thiruvarur, Nagapattinam, Mayiladuthurai and Cuddalore districts.

You May Like