கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை நாம் தமிழர் கட்சியின் ஆதிக்கம் சற்று ஓங்கியிருக்கக் கூடிய பகுதியாகும். இந்தச் சூழலில் திமுக நிர்வாகியை கண்டித்து நாகர்கோவிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், அமைச்சர் மனோ தங்கராஜை ”பால் வியாபாரி” என்றும், ”உனக்கு என்ன கொழுப்பு” இருக்கும் எனவும் சாடினார். மேலும், அமைச்சர் மனோ தங்கராஜ் தனது மகனுக்கு எம்.எல்.ஏ. சீட் வாங்கிவிடலாம் என துடித்துக் கொண்டிருக்கிறார் என்றும் அவரை பற்றிய எல்லா விவரமும் தனக்குத் தெரியும் என்றும் பேசியுள்ளார்.
நாகர்கோவிலை கெடுக்க வேறு யாரும் தேவையில்லைங்க, இந்த மனோ தங்கராஜூன்னு ஒரு பய போதும். நீயும் வாழ்நாள் முழுவதும் அமைச்சராகவே இருந்திடலாம்னு நினைக்கிற, உன் மகனுக்கு எம்.எல்.ஏ. சீட் வாங்கத் துடிக்கிற. நான் விட்ருவேன்னு மட்டும் நினைக்காதே. ஆடு, இன்னும் எவ்வளவு நாளுக்கு ஆடுவீங்கன்னு பார்க்கிறேன்” என மிக கடுமையான முறையில் ஒருமையில் சாடினார் சீமான். அதேபோல், பால் வியாபாரம் செய்தால் மட்டும் போதுமா, மாடுகள் எங்கே என வினவிய சீமான், மனோ தங்கராஜை பார்த்தால் மாடு எங்கே எனக் கேளுங்க” என்றும் கூறினார்.