fbpx

ஒருநாளைக்கு எவ்வளவு நேரம் தூங்கவேண்டும், பணி செய்யவேண்டும்?… ஐசிஎம்ஆர் பரிந்துரை!

ICMR: ஒரு நபர் நாள் ஒன்றுக்கு எட்டு மணிநேரம் தூக்கம் மற்றும் பணிபுரிய வேண்டும் என்று ஐசிஎம்ஆர் பரிந்துரைத்துள்ளது.

பொதுவாக தூக்கமின்மை என்பது பல்வேறு காரணங்களால் ஏற்பட்டாலும் இதுவும் ஒரு நோயாக உலகம் முழுவதும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. 30 சதவீதம் மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கடந்த ஆண்டு வெளியான ஆய்வு தரவுகள் தெரிவிக்கின்றன.

மாறி வரும் வாழ்க்கை சூழ்நிலைக்கு ஏற்ப இரவு நேர வேலை, பணி சுமைகள் ஆகியவை இந்தியாவில் பெரும்பாலான மக்களின் தூக்கத்தை பாதிக்கும் காரணியாக மாறி உள்ளது. மனித மூளை சரிவரச் செயல்பட நாளொன்றுக்கு ஆறு முதல் எட்டு மணி நேர தூக்கம் அவசியமானதாகக் கருதப்படுகிறது. காலையில் எழுந்ததும் வாக்கிங் அல்லது உடற்பயிற்சிகளை மேற்கொள்வது இரவு நன்றாக தூங்க உதவக்கூடும்.

இந்தியாவில் நோய் வாய்ப்பட்டவர்களில் 56 சதவீதம் பேர் ஆரோக்கியமற்ற டயட்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 ஆண்டுகள் கழித்து ஐசிஎம்ஆர் விதிமுறைகளை திருத்தியமைத்துள்ளது. 148 பக்கங்கள் கொண்ட 17 விதிகளை ஐசிஎம்ஆர் வகுத்துள்ளது. அதில் ஒரு நபர் நாள் ஒன்றுக்கு எட்டு மணிநேரம் தூக்கம் மற்றும் பணிபுரிய வேண்டும் என்று ஐசிஎம்ஆர் பரிந்துரைத்துள்ளது.

இதேபோல், குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினர் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 60 நிமிடங்கள் மிதமான செயல்பாட்டை செய்யவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.பெரியவர்கள் வாரத்தில் குறைந்தது 5 நாட்களில் ஒரு நாளைக்கு 30 – 60 நிமிடங்கள் வரை மிதமான – தீவிர ஏரோபி உடற்பயிற்சி செய்ய பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

Readmore: வயிற்றுப் புற்றுநோயைக் கண்டறியும் மவுத்வாஷ்!… எவ்வாறு உதவுகிறது?

Kokila

Next Post

12 மாவோயிஸ்டுகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!

Sun May 12 , 2024
Maoists: சத்தீஸ்கர் மாநிலத்தில் 12 மாவோயிஸ்டுகள் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள கங்களூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் முதல் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். 8 மணிநேரம் நடந்த தேடுதல் வேட்டையில் 12 மாவோயிஸ்டுகளை பாதுகாப்பு படையினர் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, இரண்டு பாதுகாப்புப் பணியாளர்கள் காயமடைந்தனர். முன்னதாக கடந்த ஏப்ரல் 2 […]

You May Like