fbpx

உலகில் நம்பமுடியாத குழந்தை பிறப்புகள் உலக சாதனை படைத்தது எப்படி?… சுவாரஸிய தகவல்கள்!

ஒவ்வொரு பெண்ணின் பிரசவக்காலமும் மறக்க முடியாதது என்று சொல்வார்கள். பிரசவ காலம் என்பது குழந்தையின் பிறப்பை குறிக்க கூடிய செயல். சில பெண்களுக்கு ஒரு மணி நேரத்தில் பிரசவம் ஆக கூடும். சில பெண்களுக்கு சில மணி நேரங்கள் வரை ஆகலாம். இன்னும் சில பெண்களுக்கு ஒரு நாள் வரை கூட ஆகலாம். முதல் பிரசவமாக இருக்கும் பெண்களுக்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரையும் ஆகலாம். முதல் முறை கருத்தரிக்கும் பெண்களின் பிரசவக்காலம் சற்று நீண்ட நேரம் இருக்க கூடும். அந்தவகையில், இதுவரை பதிவுசெய்யப்பட்ட மிகவும் நம்பமுடியாத குழந்தை பிறப்பு கதைகள் பற்றி இன்று பார்ப்போம்.

சோதனையில் இருந்து தப்பிய முதல் குழந்தை ஜேம்ஸ் எல்ஜின் கில். இவர் 1987 இல் கனடாவில் பிறந்தார். ஜேம்ஸ் 21 வாரங்கள் மற்றும் 5 நாட்களில் பிறந்தார். அதாவது அவர் 128 நாட்கள் முன்னதாகவே பிறந்துள்ளார். அவரது பிறப்பு எடை நம்பமுடியாத அளவிற்கு 1 பவுண்டு மற்றும் 6 அவுன்ஸ் ஆகும். அதாவது கிட்டத்தட்ட 650 கிராம் எடையில் இருந்துள்ளார். அவர் பிறந்த போது, ஜேம்ஸ் மிகவும் முன்கூட்டியே பிறந்திருப்பதால் அவர் விரைவில் இறந்து விடுவார் என்று மருத்துவர்கள் எதிர்பார்த்தனர். அவர் உயிர்பிழைத்தால், அவருக்கு பல கடுமையான ஊனம் ஏற்பட வாய்ப்புக்கள் இருக்கும் என்றும் அவரது பெற்றோர் அதனால் அவரை சரியாக கவனித்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் சொன்னார்கள். ஆனால் அந்தக் குழந்தையோ பிரச்சினைகளை தோற்கடித்து ஆரோக்கியமான மனிதனாக வளர்ந்தது.

ஆச்சரியப்படும் விதமாக, ஜேம்ஸ் எல்ஜின் கில் விரைவாக பிறந்தாலும் எடை குறைந்தவர் அல்லர். எடை குறைந்த குழந்தையாக 2004 ஆம் ஆண்டு செப்டெம்பரில் ருமேசா ரஹ்மான் பிறந்தார். ருமேசா ஒன்றாக பிறந்த இரண்டு இரட்டையர்களில் ஒருவராக இருந்தார். அவர்களின் தாயார் எக்லாம்ப்சியாவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், குழந்தைகளை காப்பாற்றும் பொருட்டு 26 வாரங்களுக்கு முன்னரே அறுவைசிகிச்சை மூலம் பிரசவித்தனர்.

ருமாய்சாவின் சகோதரி ஒரு சிறிய 1 பவுண்டு 4 அவுன்ஸ் எடையுள்ள நிலையில், ருமாய்சா அந்த எடையில் பாதி எடையை அதாவது அதிர்ச்சியூட்டும் 8.6 அவுன்ஸ் தான் கொண்டிருந்தார். அதாவது ஏறக்குறைய 245 கிராம் அளவு நிறை. மேலும் அவர் 9.5 அங்குல நீளமுள்ள, நீளம் குறைந்த குழந்தை எனவும் சாதனை படைத்தார். ஜனவரி மாத தொடக்கத்தில் அவரது சகோதரி மருத்துவமனையை விட்டு வெளியேறும்போது, ​​ருமாய்சா மேலும் ஒரு மாதம் வைத்தியசாலையில் தங்கவேண்டியிருந்தது.

2004 இல் ருமைசா ரஹ்மான் நீளம் குறைந்த குழந்தையாக பிறக்க முன் நிசா ஜுவரெஸ்தான் அந்த பட்டத்தை பெற்றிருந்தார். இவர் ஐக்கிய அமெரிக்காவின் மினசோட்டாவில் 2002 இல் பிறந்தார். 108 நாட்கள் முன்கூட்டியே பிறந்த நிசாவும் பிறக்கும்போதே ஒரு பவுண்டின் கீழ் எடையுள்ள கிட்டத்தட்ட 11.3 அவுன்ஸ்-ஆக இருக்க வேண்டும். இவரின் நீளம் 9.44 அங்குலங்களாக இருந்தது. அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேற முன் கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் அங்கு சிகிச்சை பெற்றார்.

1879 ஆம் ஆண்டில் 7 அடி 11 அங்குல நீளமான, உலகில் வாழ்ந்த உயரமான பெண்மணிதான் அன்னா ஹைனிங் பேட்ஸ். அவரது சமமான உயரமான கணவருக்குப் பிறந்த குழந்தை தான் இந்த “பேப்” என்று பெயர் சூட்டப்பட்ட குழந்தை. மிக நீளமான மற்றும் கனமான குழந்தையென பெயர் பெற்ற இந்த குழந்தை, துரதிஷ்டவசமாக பிறந்து பதினொரு மணி நேரம் மட்டுமே உயிர் வாழ்ந்தார். பேப் 22 பவுண்டுகள் எடை இருந்ததாகவும், பிறக்கும்போது 28 அங்குலங்களை கொண்டிருந்ததாகவும் கிண்ணஸ் புத்தகத்தில் பெயர் பெற்றார்.

கார்மெலினா ஃபெடெல் என்ற குழந்தை மிகவும் எடை கூடிய குழந்தைக்கான பட்டத்தை வைத்திருக்கிறார். 1955 இல் இத்தாலியில் பிறந்தபோது குழந்தை நம்பமுடியாத அளவில் 22 பவுண்டுகள் மற்றும் 8 அவுன்ஸ் எடையைக் கொண்டிருந்தது. பேப் போலில்லாமல் இந்த ஃபெடலின் மகன் உயிர் பிழைத்துவிட்டார். ஒரு குழந்தை பிறக்கும்போதே பற்களை கொண்டிருப்பது விசித்திரமானது. இருப்பினும் இது மிகவும் அரிதானது. பெரும்பாலான குழந்தைகளில், 5 முதல் 8 மாதங்கள் வரை பற்கள் உருவாகத் தொடங்குவதில்லை. ஆனால் 1990 ஆம் ஆண்டில், இங்கிலாந்தின் சீன் கீனே என்ற குழந்தை அதிர்ச்சியூட்டும் 12 பற்களுடன் பிறந்தார். பல பற்கள் இருப்பதானது குழந்தைக்கு உணவளிக்கும் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதை மருத்துவர்கள் உணர்ந்தனர். எனவே அவற்றை அவர்கள் பிரித்தெடுத்தனர். சீன் பின்னர் 18 மாதங்கள் நிரம்பிய பின்னர் இரண்டாவது தடவையாக முழு பற்களையும் பெற்றார்.

Kokila

Next Post

வாவ்...! வீடு கட்ட கடன் உச்ச வரம்பினை ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்வு...! தமிழக அரசு அதிரடி...!

Mon Jul 31 , 2023
பணியாளர்கள் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வீட்டு வசதிக்கடன் தொகையின் உச்ச வரம்பினை ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தி வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பணியாளர்‌ கூட்டுறவு கடன்‌ மற்றும்‌ சிக்கன நாணயச்‌ சங்கங்களில்‌ உறுப்பினர்களுக்கு வழங்கப்படும்‌ வீட்டு வசதிக்கடன்‌ தொகையின்‌ உச்ச வரம்பினை உயர்த்தி வழங்கிடக்‌ கோரிக்கைகள்‌ பெறப்பட்டதை தொடர்ந்து அக்கோரிக்கைகள்‌ பரிசீலிக்கப்பட்டு மேற்படி வீட்டு வசதிக்கடன்‌ தொகையினை ரூ.5/- இலட்சத்திலிருந்து அதிகபட்சம்‌ […]

You May Like