மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் பிரபலமான SIP மூலம் உங்கள் எதிர்காலத்திற்குத் தேவையான பணத்தை சேர்க்க முடியும். ஆமாங்க, எஸ்ஐபி திட்டங்கள் மூலம் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமித்தால் கண்டிப்பாக 1 கோடி ரூபாயை சேமிக்க முடியும். அதைப் பற்றி விரிவாகக் காணலாம்.
நீங்கள் மாதம் தோறும் SIP இல் ரூ.10,000 என்று அடுத்த 15 ஆண்டுகள் தொடந்து முதலீடு செய்தால் (சராசரி ஆண்டு வட்டி 12% என வைத்துக் கொண்டால்) முதிர்வு காலத்தில் உங்களிடம் ரூ. 50 லட்சம் இருக்கும். அதே தொகை கிட்டத்தட்ட நீங்கள் 20 ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்தால் 1 கோடி ரூபாய் லாபம் ஈட்டியிருப்பீர்கள.
இந்த தொகையை வைத்து உங்கள் குழந்தைகளின் மேற்படிப்பு, கல்யாணம் அல்லது உங்களின் ஓய்வு காலத்திற்காகவும் பயன்படுத்தலாம். பெரும்பாலும் இந்தியாவில் நடுத்தர வர்க மக்கள்தான் சேமிப்புகள் மீதும் அதன்மூலம் கிடைக்கும் லாபம் மீது அதிக ஆர்வமும், அறிவும் கொண்டிருப்பதால், இம்மாதிரியான திட்டங்கள் அவர்களின் எதிர்கால வாழ்க்கையை சிக்கலில் இருந்து காப்பாற்றும் எனபதே உண்மை.
அதேசமயம் முதலீடு செய்பவர்கள் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் பற்றிய 50% அறிவைப் பெற்றிருக்க வேண்டும். மேலும் சரியான நிபுணர்கள் அறிவுரையின்கீழ் முதலீடு செய்ய வேண்டும். ஏனெனில் டெட் ஃபண்டுகளில் முதலீடு செய்வது எல்லா காலங்களிலும் கை கொடுக்கும் எனக் கூற முடியாது. ஏனெனில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டியை உயர்த்தினால் அவை நேரடியாக டெட் ஃபண்டுகளை தாக்கும்.