fbpx

2 நிமிடத்தில் e- Pan கார்டு…! நீங்களே ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்…! முழு விவரம் இதோ…!

ஆன்லைன் மூலம் இ-பான் கார்டை பதிவிறக்கம் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்…

பான் கார்டு அனைத்திற்கும் முக்கியமான ஆவணமாக இருந்து வருகிறது. காரணம் அதை பயன்படுத்தாமல் எந்த நிதி பரிவர்த்தனையும் நடக்காது. பான் கார்டு இல்லாமல், வங்கி கணக்கைத் தொடங்க முடியாது, நிதி முதலீடு செய்வதில் தொடங்கி தற்பொழுது அனைத்திற்கும் பான் அவசியம், ஒருவர் பான் கார்டை தொலைத்து விட்டால் பல சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். ஆனால் தற்பொழுது, e-PAN எல்லா இடங்களிலும் அனுமதிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அதை எப்படி பதிவிறக்கம் செய்து என்பதை பார்க்கலாம்.

ஆன்லைன் மூலம் இ-பான் கார்டை பதிவிறக்கம் செய்வது:

இ-பான் பெறுவதற்கு நீங்கள் முதலில் https://www.onlineservices.nsdl.com/paam/requestAndDownloadEPAN.html என்ற இணையதளத்திற்கு சென்று லாகின் செய்யவும். பின்னர் e-PAN அட்டை பதிவிறக்கும் விருப்பத்தை கிளிக் செய்யவும். இப்போது உங்கள் PAN எண்ணை உள்ளிடவும்.

பான் எண் தவிர, நீங்கள் உங்கள் ஆதார் எண்ணையும் உள்ளிட வேண்டும். உங்கள் பிறந்த தேதியை உள்ளிட்டு விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் படித்துவிட்டு Submit செய்யவும். உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP வரும். அடுத்து திரையில் OTP ஐ உள்ளிட்டு உறுதிப்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

நீங்கள் உறுதிசெய்தவுடன், பணம் செலுத்துவதற்கான விருப்பம் உங்கள் முன் தோன்றும். பின்னர் ரூ.8.26 செலுத்த வேண்டும். இதற்கு நீங்கள் Paytm, UPI அல்லது டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம். நீங்கள் பணம் செலுத்தியவுடன், இ-பான் கார்டைப் பதிவிறக்க முடியும்.

Vignesh

Next Post

தமிழக பொது சுகாதாரத்துறையில் காலியிடங்கள்..!! இன்றே விண்ணப்பிக்கலாம்..!! முழு விவரம் உள்ளே..!!

Sun Nov 13 , 2022
தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறைக்கு உட்பட்ட காஞ்சிபுரம்‌ மாவட்டத்தின்‌ மாவட்ட நலவாழ்வுச்சங்கம்‌ மூலமாக புதியதாக ஒப்பளிக்கப்பட்ட பகுதி சுகாதார செவிலியர்‌/நகர்ப்புற சுகாதார மேலாளர்‌ & கணினி மேலாளர்‌/தரவு மேலாளர்‌ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியின் பெயர் மற்றும் காலிப்பணியிடம்:பகுதி சுகாதார செவிலியர் / நகர்ப்புற சுகாதார மேலாளர்‌ – 2 (காலியிடம்)கணினி மேலாளர்‌/தரவு மேலாளர்‌ – 1 (காலியிடம்) கல்வித்தகுதி: பகுதி […]
தமிழக பொது சுகாதாரத்துறையில் காலியிடங்கள்..!! இன்றே விண்ணப்பிக்கலாம்..!! முழு விவரம் உள்ளே..!!

You May Like