fbpx

செல்லப்பிராணிகளுக்கு உரிமம் வாங்குவது எப்படி..? ஆன்லைனில் நீங்களே வாங்கலாம்..!!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் செல்லப்பிராணிகளை வளர்ப்போர் எவ்வாறு அதற்கான உரிமத்தை பெற்றுக் கொள்வது என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

சென்னையில் செல்லப் பிராணிகளை வளர்க்கும் உரிமையாளர்கள் இணைய வழி மூலம் அதற்கான உரிமம் பெறுவதற்கான திட்டத்தை கடந்தாண்டு ஜூன் மாதம் பெருநகர சென்னை மாநகராட்சி அறிமுகம் செய்தது. சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் உள்ள பெட் அனிமல் லைசென்ஸ் (Pet Animal License) என்ற பகுதியை தேர்வு செய்து, செல்லப்பிராணிகளை வளர்ப்போர் தங்களது செல்போன் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.

பிறகு, செல்லப் பிராணிகளை வளர்ப்போர் தங்களது பெயர், முகவரி, அடையாள அட்டை சான்று, செல்லப்பிராணிகளின் புகைப்படம் போன்ற விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த விவரங்களை மண்டல கால்நடை உதவி மருத்துவர்கள் சரிபார்த்த பிறகு செல்லப்பிராணிகளுக்கான உரிமம் உறுதிப்படுத்தப்படுகிறது. உரிமம் தொடர்பான விவரங்கள் குறுஞ்செய்தி மூலம் செல்லப்பிராணி உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்படும்.

50 ரூபாய் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தி, செல்லப்பிராணி வளர்ப்பதற்கான உரிமத்தை இணைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சென்னை மாநகராட்சி சார்பில் வழங்கப்படும் இந்த உரிமம் ஓராண்டுக்கு மட்டுமே செல்லுபடியாகும். ஒவ்வொரு ஆண்டும் இந்த உரிமத்தை செல்லப்பிராணிகளை வளர்ப்போர் புதுப்பித்து கொள்ளலாம். இவ்வாறு உரிமம் பெற்றுள்ள செல்லப்பிராணிகள் சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் செயல்படும் சிகிச்சை மையங்களில் வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டுறது.

ஒருவர் தனது வளர்ப்புப் பிராணியை பதிவு செய்யாமல் இருந்தால், பிரச்சனை ஏற்படாமல் இருக்கும் வரை அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்பது குறிப்பிட தக்கது.

Read More : அதிர்ச்சி..!! கேரளாவில் 5 பேருக்கு வெஸ்ட் நைல் காய்ச்சல்..!! சுகாதாரத்துறை எச்சரிக்கை..!!

Chella

Next Post

மொத்த மதிப்பெண் 200தான்,, ஆனால் எடுத்ததோ 212! அது எப்படி திமிங்கலம்? தீயாய் பரவும் மீம்ஸ்..

Tue May 7 , 2024
குஜராத்தில் 4ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு 2 பாடங்களில் 200க்கு 210க்கு மேல் மதிப்பெண் வழங்கப்பட்டது சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தில் ஆரம்பக் கல்வி முடிவுகள் வெளியாகின. தாஹோத் மாவட்டத்தின் அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வரும் மாணவியான வன்ஷிபென் மனிஷ்பாய் அவருடைய ரிப்போர்ட் கார்டை பெறுவதற்காக பெற்றோருடன் சென்றுள்ளார். அனைத்து பாடங்களிலும் நல்ல […]

You May Like