fbpx

பட்டா பெயர் மாற்றம் செய்யனுமா..? ஒரு ரூபாய் செலவு இல்லாமல் ஆன்லைனில் ஈஸியா வேலைய முடிக்கலாம்..!!

தமிழகத்தில் அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் துறைகளில் முக்கியமானது ரியல் எஸ்டேட்.. அதிலும் குறிப்பாக பத்திரப்பதிவில் தான் அதிக வருவாய் கிடைக்கிறது. சென்னை,கோவை,மதுரை உள்பட பல்வேறு நகரங்களில் வீடு, மனை விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் வீடு, மனைக்கான பத்திரம் மாற்றுவோர், கையோடு பட்டாவில் பெயர் மாற்றம் செய்து கொள்கிறார்கள். இதற்கு அவர்கள் அரசிடம் விண்ணப்பிப்பார்கள், அதற்கான விண்ணப்பங்கங்கள் வழக்கத்தைவிட கடந்த சில வருடங்களாக அதிகரித்து வருகிறது.

இதனால் நீண்ட நேரம் தாசில்தார் அலுவலகத்தில் காத்துக்கொண்டிருக்கும் நிலை ஏற்படுகிறது. இதனை தவிர்க்க தமிழ் நிலம் வெப்சைட்டில் பட்டா பெயர் மாற்றம் செய்யலாம். https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதளத்தில் உங்கள் பெயர், மொபைல், எண் முகவரி உள்ளிட்ட விவரங்களை கொடுத்து பதிவு செய்ய வேண்டும்.

பதிவு செய்த பின், மொபைல் நம்பர், ஐடி , பாஸ்வேர்டு கொடுத்து உள்ளே செல்ல வேண்டும். பட்டா மாறுதல் கோரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த யார் வேண்டுமானாலும் இம்முறையில் விண்ணப்பிக்கலாம். பட்டா பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் உட்பிரிவுள்ள இனங்கள் அல்லது உட்பிரிவு அல்லாத இனங்கள் என 2 முறையில் பட்டா பெயர் மாற்றம் செய்ய வேண்டும். உட்பிரிவு இல்லாத நிலம் என்றால் அதற்கான லிங்கிலும், உட்பிரிவு உள்ள இனம் என்றால் அதற்கான லிங்கிலும் பட்டா பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள் : கிரையப் பத்திரம், செட்டில்மென்ட் பத்திரம், பாகப்பிரிவினை பத்திரம், தானப் பத்திரம், பரிவர்த்தனை பத்திரம், அக்குவிடுதலைப் பத்திரம் தேவையாகும். இந்த 6 பத்திரங்களில் எந்த பத்திரம் உங்களிடம் உள்ளதோ அந்த பத்திரத்தின் நகலை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பத்திரப்பதிவு செய்தவர்களின் ஆதார் அல்லது அடையாள அட்டை, முகவரி சான்றிதழ், பதிவு பத்திரம் போன்றவை போதும்.

ஆனால், பின்னர் தானப்பத்திரம், பாகப்பரிவினை பத்திரம் உள்ளிட்டவை என்றால் கண்டிப்பாக வாரிசு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் அப்லோடு செய்ய வேண்டும். எல்லாம் முடிந்த பின், உட்பிரிவு உள்ள பட்டா வகை என்றால், 60 ரூபாய் மற்றும் 600 என இரண்டு கட்டங்கள் சேர்த்து வசூலிப்பார்கள். ஒரு உட்பிரிவுக்கு 600 என ஒவ்வொரு உட்பிரிவுக்கும் 600 கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். இதை முடித்த பின்னர் பட்டா பெயர் மாற்றம் செய்தற்காக அத்தாட்சி சான்று தருவார்கள்.

Read more:சரும அழகை மேம்படுத்தும் கழுதை பால்.. ஒரு லிட்டர் இவ்வளவு ரூபாயா..? அப்படி இதில் என்ன ஸ்பெஷல்?

English Summary

How to change your patta online without any cost? What documents are required?

Next Post

IND vs NZ : சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு ஓய்வை அறிவிக்கிறாரா ரோஹித் ஷர்மா..?

Sun Mar 9 , 2025
Sourav Ganguly Shuts Down Rohit Sharma Retirement Chatter With Blunt Reminder

You May Like