fbpx

ஆன்லைனில் ஓட்டுநர் உரிமம் பெறுவது எப்படி…? ஜுன் 1 முதல் வருகிறது புதிய நடைமுறை…!

பொதுவாக ஓட்டுநர் உரிமம் வாங்க வேண்டும் என்றால் நாம் ஆர்டிஓ அலுவலகத்திற்கு சென்று ஓட்டுநர் சோதனையில் பங்கேற்க வேண்டும். ஆனால் தற்போது அதற்கு மாறாக வேறு ஒரு நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. புதிய விதிகளின்படி, ஆர்டிஓ அலுவலகங்களுக்கு மாறாக தனியார் நிறுவனங்களுக்கு ஓட்டுநர் சோதனை நடத்தவும், ஓட்டுநர் சான்றிதழ் வழங்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதி ஜூன் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓட்டுநர் உரிமம் பெறுவது எப்படி..?

முதலில் https://parivahan.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லவும். இதில் முகப்புப் பக்கத்தில் உள்ள டிரைவிங் லைசென்ஸ் அப்ளை ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் விண்ணப்ப படிவம் திறக்கும், தேவைப்பட்டால் அச்சிடலாம். விண்ணப்ப படிவத்தில் தேவையான அனைத்து தகவல்களையும் சரியாக நிரப்புங்கள்படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். இப்போது கொடுக்கப்பட்ட வழிமுறைகளின்படி மீண்டும் நிரப்பவும்.

உங்கள் விருப்பத்தைப் பொறுத்து ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப செயல்முறையை முடித்த பிறகு, தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்கும் உங்கள் ஓட்டுநர் திறமைக்கான ஆதாரத்தை வழங்குவதற்கும் ஆர்டிஓ அலுவலகத்தை அணுகவும்.அனைத்து படிகளையும் சமர்பித்த பிறகு, உங்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும்.

Vignesh

Next Post

பயங்கரம்!... பைக்கில் சென்ற மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு!… 40 பேர் பலி!… பதறிய மக்கள்!

Wed May 22 , 2024
Nigeria: நைஜீரியாவில் ஒரு சுரங்க சமூகத்தின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 42 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவில் இனக் கலவரங்கள், மத மோதல்கள், அரசியல் கிளர்ச்சிகள், கால்நடை மேய்ச்சலில் ஈடுபடுவோருக்கும் – விவசாயிகளுக்கும் இடையேயான மோதல்கள், கொள்ளைக்காரர்களின் தாக்குதல்கள் என பல இன்னல்களுக்குப் பெயர் போன பிரதேசமாக இருக்கிறது. அந்தவகையில் வடமத்திய நைஜீரியாவின் பீடபூமி மாநிலத்தில் உள்ள Wase மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை பயங்கர துப்பாக்கிச்சூடு […]

You May Like