fbpx

கடன் தொல்லையில் இருந்து விடுபட வேண்டுமா.? உடனடியாக இந்த நவதானிய பரிகாரத்தை செய்யுங்க.!?

தற்போதுள்ள காலகட்டத்தில் கடன் வாங்குவது என்பது மிகவும் சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது. ஒரு சில நபர்கள் மட்டுமே தான் கடன் வாங்காமல் வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். பொதுவாக எந்த விசேஷங்கள் மற்றும் நல்லது, கெட்டது என எந்த நிகழ்வுlகள் நடந்தாலும் அங்கு கடன் வாங்கி தான் செலவு செய்கிறார்கள். இந்த பழக்கம் காலப்போக்கில் அதிகரித்து கந்துவட்டி தொல்லையால் பல குடும்பங்கள் சீரழிந்து போகின்றது.

நமது வாழ்க்கையை மேம்படுத்த கடன் வாங்குவது என்பது வேறு. ஆனால் சாதாரண செலவுகளுக்காகவும், வெளியே செல்வது, ஊர் சுற்றுவது போன்ற சந்தோஷத்திற்காகவும் வட்டி அதிகமாக கடன் வாங்குவது நம் மகிழ்ச்சியை கெடுத்து வாழ்க்கையை நாசமாக்கும். கந்துவட்டி, நாள் வட்டி, மீட்டர் வட்டி என்று பலவகையான வட்டி கடன்கள் இருந்து வருகின்றன. இப்படிப்பட்ட கடன்களை அவசரத்திற்கு வாங்கி விட்டு கட்ட முடியாமல் பலரும் தவித்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட அதிக வட்டியுடைய கடனை முடிந்த அளவிற்கு வாங்காமல் இருப்பது தான் நல்லது. மேலும் இந்த கடன் பிரச்சனையிலிருந்து உடனடியாக வெளியேறுவதற்கு நவதானிய பரிகாரம் செய்து வரலாம். இந்த நவதானிய பரிகாரம் செய்ய தேவையான பொருட்கள் மற்றும் எப்படி செய்யலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்?

தேவையான பொருட்கள்: மண் செம்பு, நவதானியம். வெள்ளிக்கிழமை காலையில் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு ஆறு மணி முதல் ஏழு மணிக்குள் இந்த நவதானிய பரிகாரத்தை செய்ய வேண்டும். முதலில் மண்செம்பை சுத்தமாக கழுவி மஞ்சள், குங்குமம் விட்டு அதில் முழுவதுமாக நவதானியத்தை நிரப்ப வேண்டும். பின்பு யார் கண்ணிலும் படாத அளவிற்கு சுத்தமான இடத்தில் இந்த மண்செம்பை வைத்துவிட்டு அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை வரும்போது இந்த நவதானியங்களை பறவைகளுக்கு தானமாக அளிக்க வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் கடன் தொல்லை தீர்ந்து மகிழ்ச்சியாக வாழலாம்.

Rupa

Next Post

இந்த நோய்கள் இருப்பவர்கள் கத்தரிக்காயை மறந்தும் கூட சாப்பிடாதீங்க.!

Fri Jan 26 , 2024
பொதுவாக காய்கறிகள் என்றாலே பல்வேறு நன்மைகளை உடலுக்கு தந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. அடிக்கடி உணவில் காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகவும் இருக்கிறது. ஆனால் ஒரு சில காய்கறிகளை குறிப்பிட்ட நோயுடையவர்கள் சாப்பிடக்கூடாது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றன. குறிப்பாக கத்திரிக்காய் ஒரு சில நோயுடையவர்கள் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. எல்லா காலங்களிலும் சாதாரணமாக கிடைக்கும் கத்திரிக்காய் மிகவும் ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. எடையை குறைக்க […]

You May Like