fbpx

பணப்பிரச்சனை நீங்கி செல்வம் செழிக்க எந்த கடவுளை வழிபாடு செய்ய வேண்டும் தெரியுமா.!

தற்போது உள்ள நவீன காலகட்டத்தில் பணத்திற்காகதான் பலரும் இரவு, பகல் என்று பாராமல் தூக்கம் இல்லாமல் உழைத்துக் கொண்டிருக்கிறோம். பண தேவைகளும் செலவுகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. வாழ்வில் பல கஷ்டங்களை தாண்டி பணத்திற்காக தொடர்ந்து ஓடி கொண்டிருக்கிறோம்.

இது போன்ற நிலையில் பணத்தினை எப்படி அதிகமாக வரவு வைக்கலாம் என்றும், செலவு அதிகரிக்காமல் என்ன செய்யலாம் என்றும் பலரும் யோசித்து வருகிறோம். பணவரவு அதிகரித்து குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகவும், சகல செல்வங்களும் கிடைப்பதற்கு லட்சுமி தேவியையும், குபேர பகவானையும் சேர்த்து வழிபட்டு வர வேண்டும்.

செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியை வழிபட்டால் புகழ், வெற்றி, வீரம், கல்வி, புத்திர பாக்கியம், அறிவு, அழகு, ஆரோக்கியம், நீண்ட ஆயுள், தைரியம், தனம், தான்யம், கௌரவம் போன்ற 16 செல்வங்களும் பெருகி வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று முன்னோர்கள் கூறுவது இந்த 16 செல்வங்களை தான்.

வழிபாடு செய்யும் முறை:
1. குபேரலட்சுமி சிலையை பூஜை அறையில் வைத்து தினமும் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும்.
2. பெரிய வாழை இலை வாங்கி அதை நவதானியங்கள் நிரப்பி குபேர லட்சுமி சிலையின் முன்பு வைத்து வழிபட வேண்டும்.
3. பின்பு சொம்பு பாத்திரத்தில் மஞ்சள், குங்குமம் வைத்து முழுவதுமாக தண்ணீர் நிரப்பி மாவிலை விளக்கு வைத்து உடைத்த தேங்காயையும் வைக்க வேண்டும்.
4. மஞ்சளில் பிள்ளையார் பிடித்து இலையின் அருகில் வைத்து விட்டு பூஜை ஆரம்பிக்கலாம். இவ்வாறு செய்தால் செல்வம் பெருகி குடும்ப்த்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

Rupa

Next Post

கல்லால் செய்யப்பட்ட விஷ்ணு சிலை நீரில் மிதக்கும் அதிசயம்.! இந்த கோயில் எங்கு உள்ளது தெரியுமா.!?

Mon Feb 5 , 2024
இந்தியாவில் அரசர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோயில்களையும் அதன் வரலாறுகளையும் பார்க்கும்போது நமக்கு பிரமிப்பாகவும், ஆச்சரியமாகவும் இருக்கும். அந்த காலத்தில் கட்டிட கலையில் நம் முன்னோர்கள் எப்படி சிறந்து விளங்கினார்கள் என்பதற்கு சிறந்த உதாரணமாக இந்த கோயில்கள் இருந்து வருகின்றன. இந்த வகையில் நீரில் மிதக்கும் அதிசய விஷ்ணு சிலையை கொண்ட கோயிலை குறித்து இப்பதிவில் பார்க்கலாம் நேபாளத்தின் தலைநகரான காட்மண்டு என்ற இடத்திலிருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த […]

You May Like