கடந்த ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தில் தேர்தல் சட்டங்கள் (திருத்தம்) சட்டம் நிறைவேற்றபப்ட்டது.. இந்த சட்டத்தின் கீழ், அனைவரும் தங்களது வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்குமாறு இந்திய தேர்தல் ஆணையம் (ECI) கேட்டுக்கொண்டுள்ளது.. வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை சரிபார்த்தல், வாக்காளர்களின் அடையாளத்தை அங்கீகரிப்பது மற்றும் ஒரே தொகுதியில் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை அல்லது பல தொகுதிகளில் வாக்கை பதிவு செய்துள்ளார்களா என்பதைச் சரிபார்ப்பது போன்ற காரணங்களுக்காக ஆதார் அட்டையை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது..
எனினும் இது இன்னும் கட்டாயமாக்கப்படவில்லை.. ஆதார் எண் வழங்கப்படாத பட்சத்தில், வாக்காளர் பட்டியலில் இருந்து தற்போதுள்ள எந்த ஒரு வாக்காளர் பெயரும் நீக்கப்பட மாட்டாது என தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. இப்போது, உங்கள் ஆதார் அட்டையை வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆன்லைனில் இணைக்க விரும்பினால், தேர்தல் ஆணையம் சில எளிய வழிமுறைகளைப் பகிர்ந்துள்ளது. உங்கள் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை இணைப்பதற்கான வழிமுறை இதோ..
வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் அட்டையுடன் எப்படி இணைப்பது..?
- படி 1: கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து Voter Helpline செயலியைப் பதிவிறக்கவும்.
- படி 2: பயன்பாட்டைத் திறந்து ‘I Agree’ option விருப்பத்தை கிளிக் செய்து ‘Next’.’ என்பதை கிளிக் செய்யவும்..
- படி 3: முதல் விருப்பமான ‘Voter Registration’ என்பதை கிளிக் செய்யவும்
- படி 4: Electoral Authentication Form (Form 6B) என்பதை கிளிக் செய்து திறக்கவும்.
- படி 5: ‘Lets Start’ என்பதைக் கிளிக் செய்யவும்.
- படி 6: ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட உங்களின் அதிகாரப்பூர்வ மொபைல் எண்ணை உள்ளிட்டு send OTP என்பதை தேர்ந்தெடுக்கவும்.
- படி 7: நீங்கள் பெற்ற OTP ஐ உள்ளிட்டு ‘Verify’ என்பதைக் கிளிக் செய்யவும்.
- படி 8: Yes I Have Voter ID என்பதைக் கிளிக் செய்து, ‘Next’ என்பதைக் கிளிக் செய்யவும்.
- படி 9: உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை உள்ளிட்டு, உங்கள் மாநிலத்தைத் தேர்ந்தெடுத்து, ‘Fetch details’ என்பதைக் கிளிக் செய்யவும்.
- படி 10: ‘Proceed’ என்பதைக் கிளிக் செய்யவும்.
- படி 11: ஆதார் எண், பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் உங்கள் அங்கீகார இடத்தை நிரப்பி ‘Done’ என்பதைக் கிளிக் செய்யவும்.
- படி 12: படிவம் 6B மாதிரிக்காட்சி பக்கம் திறக்கும். உங்கள் விவரங்களை மீண்டும் சரிபார்த்து, உங்கள் படிவம் 6B இன் இறுதிச் சமர்ப்பிப்பிற்கு ‘Confirm’ என்பதைக் கிளிக் செய்யவும்.