fbpx

உஷார்! ஆதார் எண்களை பயன்படுத்தி நடைபெறும் பண மோசடி.! நம்மை காத்துக் கொள்வது எப்படி.?

ஆதார் எண்களை பயன்படுத்தி பண மோசடி செய்து வரும் வழக்குகள் நம் நாட்டின் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. இது தொடர்பாக பெங்களூரில் மட்டும் 116 வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. மேலும் ஆந்திரா, தெலுங்கானா, ராஜஸ்தான், மேற்கு வங்காளம், ஹரியானா என நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் இந்த மோசடி தொடர்பாக பல வழக்குகள் பதிவாகி இருக்கிறது.

நம் நாட்டில் ஆதார் அடிப்படையில் பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஆதார் பேஸ்டு பேமெண்ட் சிஸ்டம் என அழைக்கப்படுகிறது. இந்த முறையில் ஆதார் எண்ணை அங்கீகரிப்பு செய்வதன் மூலம் பணப்பரிமாற்றம் செய்து கொள்ளலாம். இதுவும் யூனிஃபைடு பேமெண்ட் இன்டர்ஃபேஸ் தளத்தை பயன்படுத்துகிறது. இந்தப் பணப்பரிவர்த்தன முறையை பயன்படுத்தி தான் தற்போது மோசடி நடைபெற்று இருக்கிறது.

இந்த மோசடியில் குற்ற செயலில் ஈடுபடுபவர்கள் பயனர்களின் ஆதார் தகவல்கள் மற்றும் பயோமெட்ரிக் தகவல்களை பொது இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து அதனை வைத்து மோசடியில் ஈடுபடுகிறார்கள். இந்த மோசடியில் ஒரு நாளைக்கு 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே பயனர்களின் வங்கி கணக்கிலிருந்து திருடப்பட்டு இருக்கிறது. ஆதார் பேஸ்டு பேமெண்ட் சிஸ்டம் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 25,000 ரூபாய் தான் பண பரிவர்த்தனைக்கு அனுமதிக்கும். இதனால்தான் குறைந்த அளவு படம் திருடப்பட்டிருக்கிறது.

இது போன்ற மோசடிகளில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம். வங்கி கணக்கு தொடங்குவதற்கும் மொபைல் எண் பெறுவது போன்ற சேவைகளுக்கு ஆதார் அட்டையை கொடுக்காமல் பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களை பயன்படுத்த சட்டத்தில் இடம் இருக்கிறது. மேலும் பொது தலங்களில் ஆதார் நம்பரை பதிய நேரிட்டால் முழு ஆதார் எண்ணையும் பயன்படுத்தாமல் கடைசி நான்கு எண்களை மட்டும் பதிவு செய்ய வேண்டும். ஆதார் அட்டையை ஏதேனும் ஒரு ஆதாரத்திற்காக பதிவு செய்யும்போது அதனை லாக் செய்வதற்குள்ள வசதியை யூஐடிஏஐ இணையதளம் வழங்கி இருக்கிறது. இது போன்ற விழிப்புணர்வுகளை நாம் பயன்படுத்துவதன் மூலம் மோசடிகளில் இருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும்.

Kathir

Next Post

குடிபோதையில் இளம்பெண்ணை ஏமாற்றி உடலுறவு..!! பாஜக எம்பி மகன் மீது பரபரப்பு புகார்..!! நடந்தது என்ன..?

Sat Nov 18 , 2023
கர்நாடக மாநிலம் பெங்களூரு பசவனகுடி காவல் நிலையத்தில் இளம் பெண் ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகாரில், மைசூரு மாநகரில் உள்ள மகாராஜ கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வரும் பல்லாரி தொகுதி பாஜக மக்களவை தொகுதி உறுப்பினர் தேவேந்திரப்பாவின் மகன் ரங்கநாத் என்னை காதலித்தார். கடந்த ஜனவரி மாதம் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இருவரும் தங்கி இருந்தபோது, மது குடித்த போதையில் இருந்த ரங்கநாத், தன்னை திருமணம் […]

You May Like