உலகளவில் பலகோடி யூஸர்களால் பயன்படுத்தப்படும் மிகவும் பிரபலமான இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப்ஸாக இருக்கிறது வாட்ஸ்அப். தகவல் தொடர்புகளை வேடிக்கையாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்ற ஃபோட்டோக்கள், வீடியோக்கள், டாக்குமென்ட்ஸ், GIF-ஸ்கள் மற்றும் ஸ்டிக்கர்களை ஷேர் செய்ய உதவுகிறது மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப். இது மேலும் வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால் மூலம் பயனர்களை தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இணைக்க இது உதவுகிறது.
இந்த வாட்ஸ்அப்-ல் இன்கமிங் கால் மற்றும் செய்திகளுக்கு விருப்பப்படி ரிங்டோன்களை வைக்கலாம். இப்படி விருப்பப்பட்ட விழிப்பூட்டல்களை அமைப்பதன் மூலம் மற்ற தொடர்புகளிலிருந்து அவற்றை வேறுபடுத்திக் காட்ட முடியும். குறிப்பிட்ட நபரின் இன்கமிங் அழைப்புகளை மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டு காட்ட நீங்கள் அவர்களுக்கு தனிப்பட்ட ரிங்டோன்களை வைப்பது எப்படி என்பது குறித்து, படிப்படியான வழிகாட்டி இங்கே உள்ளது.
ஆண்ட்ராய்டு இல் தனிப்பட்ட தொடர்புகளுக்கு தனிப்பயன் ரிங்டோன்களை அமைக்க, உங்கள் மொபைலில் வாட்ஸ்அப் செயலியில் சாட்ஸ்களுக்குள் செல்லவும் இப்போது, நீங்கள் யாருடை அழைப்புக்கு விருப்பப்பட்ட ரிங்டோனை வைக்கவேண்டுமோ அவர்களை தேர்ந்தெடுக்கவும். பிறகு அவர்களின் ப்ரொபைல்க்கு செல்லவும், கீழே ஸ்க்ரோல் செய்து தனிப்பயன் அறிவிப்பைத் தேர்வு செய்து, அதனுள் “Use custom notifications” என்ற பெட்டியை சரிபார்க்கவும், அழைப்பு அறிவிப்புகளின் கீழ், ரிங்டோனைத் தட்டி, உங்களுக்கு விருப்பமான ரிங்டோனைத் தேர்ந்தெடுக்கவும். இதே போல் மெசேஜ் டோன்களையும் நமது விருப்பம் போல் மாற்றிக்கொள்ளலாம்.