fbpx

போலி ரூபாய் நோட்டை எப்படி கண்டறிவது..? தெரிந்துகொள்ள இதை படிங்க..

நாட்டின் பொருளாதார நிலையில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அச்சுறுத்தலாக போலி ரூபாய் நோட்டுகள் உள்ளன.. எனவே போலி இந்திய ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தைத் தடுக்க, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) உண்மையான ரூபாய் நோட்டுகளில் பாதுகாப்பு அம்சங்களைப் பயன்படுத்துதல், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களைத் தொடர்ந்து ஆய்வு செய்தல், பொது விழிப்புணர்வு பிரச்சாரங்கள் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உங்கள் கையில் உள்ள ரூ.100, 500 அல்லது 2000 நோட்டுகள் உண்மையானதா இல்லையா என்பதைக் கண்டறிய வேண்டும். எனவே ரூபாய் நோட்டு உண்மையானதா என்பதை எப்படி கண்டறிவது என்று பார்க்கலாம்..

உண்மையான ரூபாய் நோட்டை எப்படி கண்டறிவது..? அனைத்து இந்திய கரன்சி நோட்டுகளிலும் வாட்டர்மார்க் இருக்கும், அதை வெளிச்சத்தில் வைத்திருக்கும் போது தெரியும். மகாத்மா காந்தியின் உருவப்படத்தின் வாட்டர்மார்க்கை இடது புறத்தில் காணலாம். உண்மையான இந்திய ரூபாய் நோட்டின் அச்சிடும் தரம், கூர்மையான மற்றும் தெளிவான கோடுகளுடன் சிறப்பாக உள்ளது. போலி நோட்டுகளில் மங்கலான கோடுகள் அல்லது கறை படிந்த மை இருக்கலாம்.

மேலும் பூதக்கண்ணாடியில் பார்க்கக்கூடிய சிறிய மைக்ரோ-லெட்டர் ரூபாய் நோட்டில் இருக்கும்.. அதாவஹ்டு உண்மையான நோட்டுகளில் மைக்ரோ எழுத்து தெளிவாகவும் கூர்மையாகவும் இருக்கும், ஆனால் போலி நோட்டுகளில் மங்கலாக இருக்கலாம்.

உண்மையான ரூபாய் நோட்டுகள் உயர்தர காகிதத்தில் அச்சிடப்படுகின்றன.. ஆனால் போலி நோட்டுகள் தொடுவதற்கு மென்மையாகவோ அல்லது வழுவழுப்பாகவோ இருக்கலாம். ஒவ்வொரு ரூபாய் தனிப்பட்ட வரிசை எண் அச்சிடப்பட்டிருக்கும். ரூபாய் நோட்டின் இருபுறமும் வரிசை எண் ஒரே மாதிரியாக இருப்பதையும் பக்கவாட்டு பேனலில் அச்சிடப்பட்ட வரிசை எண்ணுடன் பொருந்துகிறதா என்பதையும் சரிபார்க்கவும்.

இதனிடையே போலி ரூபாய் நோட்டுகள் தென்பட்டால், உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பது அவசியம். போலி ரூபாய் நோட்டுகளைக் கையாள்வது இந்தியாவில் கிரிமினல் குற்றமாகும், மேலும் அவற்றை வைத்திருப்பவர்களுக்கு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் விதிக்கப்படலாம். பொருளாதாரத்தில் போலி ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படுவதைத் தடுக்க விழிப்புடன் இருப்பது மற்றும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பது முக்கியம். கரன்சி நோட்டின் நம்பகத்தன்மை குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால், அதை வங்கி அல்லது நாணய மாற்று மையத்திற்கு எடுத்துச் சென்று சரிபார்ப்பது நல்லது.

Maha

Next Post

பெண்களுக்கான சூப்பர் திட்டம்..!! 7.5 சதவீதம் வட்டி..!! வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

Mon Apr 10 , 2023
அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பெண்களுக்கு பிரத்யேகமான மகிளா சம்மன் சேமிப்பு சான்றிதழ் எனும் புதிய சேமிப்பு திட்டமும் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி நடைமுறைக்கு வந்துள்ளது. அதாவது, மகிளா சம்மன் சேமிப்பு திட்டம் என்னும் திட்டத்தின் கீழ் சிறுமிகள் அல்லது பெண்கள் என அனைத்து வயதிற்குட்பட்டவர்களும் சேமித்துக் கொள்ளலாம். இதில் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் முதலீடு செய்யலாம். இத்திட்டத்தில் உங்களுக்கு […]

You May Like