வேலை பார்க்கும்போதே பிஎஃப் பணத்தை எடுக்கமாலா என்ற சந்தேகம் நிறையப் பேரிடம் இருக்கும். உண்மையில், அவசர காலத்தில் பிஎஃப் பணத்தை எடுக்க நிறுவனம் அனுமதிக்கிறது. உங்களுக்கு திடீரென்று பணம் தேவைப்பட்டால் அதை எடுக்கலாம். ஏதேனும் மருத்துவ அவசரநிலை, கடனைத் திருப்பிச் செலுத்துதல் அல்லது வேறு ஏதேனும் அவசரநிலை இருந்தால், அந்த காரணங்களைக் குறிப்பிட்டு நீங்கள் பிஎஃப் பணத்தை எடுக்கலாம்.
முதலில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும். www.epfindia.gov.in.இந்த இணையதளத்தின் முகப்பு பக்கத்தில், ஆன்லைன் அட்வான்ஸ் க்ளைம் என்ற ஆப்சன் இருக்கும்,. அதை கிளிக் செய்யவும். இதற்குப் பிறகு, https://www.epfindia.gov.in/site_en/index.php என்ற இணைப்பில் உள்நுழையவும். இங்கே உங்கள் UAN (பிஎஃப் நம்பர்) மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு உள்நுழையவும். ஆன்லைன் சேவைகள் பிரிவில் PF முன்பணத்தை திரும்பப் பெற நீங்கள் படிவத்தை நிரப்ப வேண்டும். அதை முதலில் தேர்ந்தெடுக்க வேண்டும்.
படிவம் 31ஐ தேர்ந்தெடுத்து பிஎஃப் பணத்தை எடுப்பதற்கான காரணத்தைக் குறிப்பிடவும். இதற்குப் பிறகு, நீங்கள் திரும்பப் பெற விரும்பும் தொகையை உள்ளிடவும். உங்கள் வங்கி காசோலையின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை இங்கே பதிவேற்றவும். இதற்குப் பிறகு, வீட்டு முகவரி மற்றும் ஆதார் சரிபார்ப்பு செயல்முறையை முடிக்கவும். அடுத்து, Get Aadhaar OTP என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதற்குப் பிறகு ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர்க்கு OTP வரும். அதை உள்ளிடவும். இந்த வழியில் PF கிளைம் செயல்முறை முடிவடையும்.
PF பேலன்ஸ் பார்ப்பது எப்படி? மிஸ்டு கால் மூலம் பிஎஃப் பேலன்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம். இதற்காக உங்கள் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிலிருந்து 011 22901406 என்ற எண்ணுக்கு டயல் செய்து மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். இதற்குப் பிறகு, உங்கள் எண்ணுக்கு எஸ்எம்எஸ் வரும். அதன் மூலம் உங்கள் பிஎஃப் இருப்புத் தொகையை அறிந்துகொள்ளலாம்.