fbpx

தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரம் எப்படி இருக்கும்..? எங்கெல்லாம் கனமழை பெய்யும்..? சென்னைக்கு மீண்டும் ஆபத்தா..?

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், அடுத்த ஒரு வாரத்திற்கான வானிலை அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.

வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய இடங்களில் அடுத்த ஒரு வாரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

18.10.2024:

தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். வேலூர் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

19.10.2024:

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

20.10.2024:

தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சேலம், திருச்சி, திண்டுக்கல், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, மதுரை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள், கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது இருக்கிறது.

21.10.2024 மற்றும் 22.10.2024:

தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

23.10.2024:

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் களிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் எப்படி இருக்கும்..?

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : ’நீங்க பண்ற பெரிய தப்பே இதுதான்’..!! பெண்களிடையே புற்றுநோய் அதிகரிக்க இதுதான் முக்கிய காரணமாம்..!!

English Summary

As many districts in Tamil Nadu are experiencing rain, the weather report for the next one week is now out.

Chella

Next Post

பரபரப்பில் வயநாடு!. பிரியங்கா காந்திக்கு எதிராக களமிறங்கும் குஷ்பு?. பாஜகவின் மாஸ்டர் பிளான்!

Fri Oct 18 , 2024
Will Khushbu come as surprise candidate? BJP weighing options to make battle of Wayanad star-studded

You May Like