fbpx

தமிழ்நாட்டில் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் விடுமுறை..!! என்ன தேதி..? எதற்காக தெரியுமா..?

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ரேஷன் கடைகளுக்கு செப்.18ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு சார்பில் செப்.17ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த விநாயகர் சதுர்த்தி விடுமுறையை மாற்றி செப்.18ஆம் தேதிதான் விநாயகர் சதுர்த்தி விடுமுறை என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அனைத்து ரேஷன் கடைகளுக்கும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 18ஆம் தேதி விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கமிஷனர், அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ”விநாயகா் சதுா்த்தி பண்டிகையை முன்னிட்டு, அனைத்து ரேஷன் கடைகளுக்கும் செப்டம்பா் 18ஆம் தேதி பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. தமிழக அரசின் விடுமுறைப் பட்டியலில் விநாயகா் சதுா்த்தி பண்டிக்கைக்கான விடுமுறை செப்.17ஆம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த தேதியை செப்டம்பா் 18ஆக மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவானது, அனைத்து ரேஷன் கடைகளுக்கும் பொருந்தும்” என உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

Chella

Next Post

#Breaking..!! ’எதிர்நீச்சல்’ சீரியல் நடிகர் மாரிமுத்து திடீர் மரணம்..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

Fri Sep 8 , 2023
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் மாரிமுத்து. இவர் கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சமீபத்தில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற ’ஜெயிலர்’ படத்தில் நடித்துள்ளார். எதிர்நீச்சல் சீரியல் டிஆர்பி-யில் சக்கைப்போடு போட்டு வருவதற்கு மாரிமுத்துவின் கதாபாத்திரம் முக்கிய காரணம். அதுமட்டுமின்றி குணசேகரனாக […]

You May Like