fbpx

தமிழ்நாட்டில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்..!! இளைஞர்களே டிசம்பர் 16ஆம் தேதி ரெடியா இருங்க..!!

தமிழ்நாட்டில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான இளைஞர்கள் பயனடைந்து வருகின்றன. இந்நிலையில், டிசம்பர் 16ஆம் தேதி வேலூர் மாவட்டம் டி கே எம் மகளிர் கலை கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த முகாம், காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறவுள்ளது. முகாமில் பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை அனைத்து கல்வி தகுதி கொண்டவர்களும் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 150-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ள நிலையில், ஆர்வம் உள்ளவர்கள் 0416 – 2290042 மற்றும் 9499055896 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

போதையில் சகோதரியை நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்த கொடூரம்..!! கொலை செய்ததும் அம்பலம்..!!

Tue Dec 5 , 2023
ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டம் சக்கப்பாட் பகுதியில் கடந்த நவ.6ஆம் தேதி தனது சகோதரி மாயமாகிவிட்டதாக சகோதரன் புகார் அளித்தார். அதனடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். வனப்பகுதியில் போலீசார் ஆய்வு மேற்கொண்ட போது, அங்கு அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் இருப்பதை கண்டறிந்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், அந்த பெண் பலரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு, கோடாரியால் வெட்டப்பட்டு கொடூரமான முறையில் […]

You May Like