fbpx

ஏப்ரல் 1 முதல் தங்க நகைகளில் HUID 6 இலக்க எண் கட்டாயம்!… விதிமீறல் இருந்தால் சிறைத்தண்டனை!

ஏப்ரல் 1 ம் தேதி முதல் தங்க நகைகளில் HUID என்ற 6 இலக்க எண் கட்டாயமாக்கப்படும் என்றும் இந்த புதிய விதிகளை மீறினால் அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று ஹால்மார்க் தர நிர்ணய அமைப்பின் சென்னை பிரிவு தலைவர் பவானி தெரிவித்துள்ளார்.

தரமான தங்க நகைகளை விற்பனை செய்யும் நோக்கில் மத்திய அரசு தங்கத்துக்கு ஹால்மார்க் முத்திரையை அறிமுகம் செய்தது. 2021 ஜூன் மாதத்துக்குப் பிறகு ஹால்மார்க் முத்திரையைமத்திய அரசு படிப்படியாக கட்டாயமாக்கத் தொடங்கியது. முதற்கட்டமாக 256 மாவட்டங்களிலும் 2-ம் கட்டமாக 32 மாவட்டங்களிலும் என மொத்தம் 288 மாவட்டங்களில் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்பட்டது. ஹால்மார்க் முத்திரை கட்டாய மாக்கப்படாத மாவட்டங்களிலும், பெரும்பான்மையாக ஹால்மார்க் செய்யப்பட்ட நகைகளே விற்பனைசெய்யப்படுகின்றன.

இந்நிலையில் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ஹால்மார்க் முத்திரையுடன் 6 இலக்க தனித்த எண் கட்டாயம் என்று கடந்த மார்ச் 6ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, வரும் ஏப்ரல் 1 முதல், விற்பனை செய்யப்படும் அனைத்து தங்க நகைகளிலும், தங்கத்தால் செய்யப்பட்ட பொருட்களிலும் ஹால்மார்க் முத்திரையுடன் 6 இலக்க தனித்த அடையாள எண் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது.

இதுதொடர்பாக சென்னை தரமணியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஹால்மார்க் தர நிர்ணய அமைப்பின் சென்னை பிரிவு தலைவர் பவானி, ஒவ்வொரு நகைக்கடைக்கும் 6 இலக்க HUID எண் தனியாக வழங்கப்படும். ஹால்மார்க் உடன் 6 இலக்க HUID எண்கள் உள்ள தங்க நகைகளை மட்டுமே விற்க அனுமதிக்கப்படும் என அறிவித்தார். Bureau of indian standards அமைப்பின் BISCARE APP-ல் 6 இலக்க எண்ணை பதிவிட்டு நகை விவரங்களை அறியலாம். லேசர் கட்டிங் முறையில் ஹால்மார்க் விவரங்களை தங்க நகைகளில் பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

2 கிராமிற்கு குறைவான எடை கொண்ட நகைகளுக்கு புதிய விதிமுறைகள் கட்டாயமில்லை. ஆண்டுக்கு ரூ.40 லட்சத்திற்கும் குறைவான விற்பனை நடைபெறும் கடைகளுக்கு புதிய விதிகள் கட்டாயமில்லை. தமிழகத்தில் ஹால்மார்க் பதிவு செய்யும் மையங்கள் உள்ள 26 மாவட்டங்களில் முதலில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் கூறிய பவானி, விரைவில் மற்ற 12 மாவட்டங்களிலும் புதிய நடைமுறை அமலுக்கு வரும் எனவும் குறிப்பிட்டார். புதிய விதிமுறைகளை அமல்படுத்தாவிட்டால் ரூ.1 லட்சம் அல்லது நகை விலையில் 5 மடங்கு அபராதம். விதிமீறல் இருந்தால் அபராதம் அல்லது சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Kokila

Next Post

நாளை முதல் ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி...! யார் யாருக்கு வழங்கப்படும்...? ஆட்சியர் தகவல்

Fri Mar 31 , 2023
நாளை முதல் ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து தருமபுரி மாவட்ட‌ ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் பொதுவிநியோக திட்டத்தின்‌ தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ்‌ பயன்பெறும்‌ முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்கள்‌ மற்றும்‌ அந்தியோதிய அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப்பொருள்‌ வழங்கல்‌ துறை சார்பாக நியாயவிலை அங்காடிகள்‌ மூலம்‌ ஊட்டச்சத்து மிக்க செறிவூட்டப்பட்ட அரிசியை விநியோகம்‌ செய்ய தமிழக […]

You May Like