மனிதர்களை கொல்லும் தாவர பூஞ்சை நோய் உலகின் முதன்முறையாக கொல்கத்தாவை சேர்ந்த நபருக்கு பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் மருத்துவ உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தாவை சேர்ந்த 61 வயதான நபர், தாவர நுண்ணுயிர் நிபுணராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இதையடுத்து, திடீரென அவருக்கு தொண்டை அழற்சி, சோர்வு, பசியின்மை, உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டதால் கடந்த 3 மாதங்களுக்கு பிறகு அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு சிடிஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, கழுத்து பகுதியின் வலது பக்கத்தில் பாராட்ராஷியல் சீழ் கட்டிகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இந்த சீழ் கட்டியின் மாதிரிகளை உலக சுகாதார நிறுவனம் ஆராய்ச்சி செய்தது.
ஆய்வின் முடிவில், தாவரங்களுக்கு ஏற்படும் காண்ட்ரோஸ்டீரியம் பர்பூரியம் என்ற தாவர பூஞ்சை தொற்று பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதாவது, தாவர பூஞ்சையியல் ஆராய்ச்சியாளரான அவர், அழுகும் பொருட்கள், காளான்கள் மற்றும் பல்வேறு தாவர பூஞ்சைகளுடன் நீண்டகாலமாக புழங்கிவந்ததால், இந்த தொற்று அவருக்கு பாதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தாவரங்கள் சில்வர் லீஃப் என்ற நோயை ஏற்படுத்தும் இந்த கிருமிகள், மனிதனின் உயிரை கொல்லும் அளவுக்கு ஆபத்தானவை என்று கூறப்படும் நிலையில், உலகிலேயே முதன்முறையாக இந்தியாவில் இந்த நோய் பாதிக்கப்பட்டிருப்பது மருத்துவ உலகில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.