வாசனை திரவியங்களில் மனித சிறுநீர் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இதனை தயாரித்த தொழிலதிபர் கைது செய்யப்பட்டார்.
சில ரூபாய்களை மிச்சப்படுத்துவதற்காக மொத்த விற்பனையாளர்களிடம் இருந்து வாசனை திரவியங்களை அடிக்கடி வாங்குகிறோம். இந்நிலையில், ஒரு தொழிலதிபர் வாசனை திரவியங்களை மொத்த விலையில் விற்பனை செய்து, பெரும் வருமானம் ஈட்டிய சம்பவம் சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆனால், அவரது வாசனை திரவியத்தின் உண்மைத்தன்மை தெரிந்தால் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. விலையுயர்ந்த வாசனை திரவியத்தில் மனித சிறுநீர் கலந்து விற்பனை செய்து வந்ததாக மான்செஸ்டரை சேர்ந்த தொழிலதிபரை போலீசார் கைது செய்துள்ளனர். சோதனையில், 400-க்கும் மேற்பட்ட போலி வாசனை திரவிய பாட்டில்கள், அணிகலன்கள் மற்றும் வயர்லெஸ் இயர்போன்கள் ஆகியவை சிக்கியது.
மான்செஸ்டரில் உள்ள சீத்தம் ஹில்லில் இரண்டு வணிக வளாகங்களில் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தப்பட்டது. அங்கு ஒரு தொழிலதிபர் நீண்ட காலமாக சொந்தமாக வாசனை திரவியம் தயாரித்து வந்ததாகவும், இதன் மூலம் ஏராளமான பணம் சம்பாதித்ததாகவும் கூறப்படுகிறது. விலையுயர்ந்த பாட்டில்களை உபயோகித்து அதில் தனக்கு சொந்தமான வாசனை திரவியத்தை நிரப்பி மொத்த விலைக்கு விற்பார். ஆய்வக சோதனைக்குப் பிறகு, வாசனை திரவியங்களில் சயனைடு உள்ளிட்ட பல நச்சு இரசாயனங்கள் மற்றும் மனித சிறுநீர் இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.