fbpx

அதிர்ச்சி சம்பவம்..!! குடிநீர் தொட்டிக்குள் மலத்தை கலந்த அண்ணி.! கொழுந்தன் பரபரப்பு புகார்.!

கடலூர் மாவட்டத்தில் இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் குட்டக்கார தெருவில் வசித்து வருபவர் வெங்கடேஷ். இவருக்கும் இவரது அண்ணன் குடும்பத்திற்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

சொத்து பிரச்சனை காரணமாக இரு குடும்பத்தினரிடையே கடந்த ஒரு வருடமாக மோதல் போக்கு நீடித்து வந்திருக்கிறது. இந்நிலையில் வெங்கடேஷ் வீட்டு குடிநீர் குழாயில் துர்நாற்றம் வீசி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து குடிநீர் தொட்டியை திறந்து பார்த்த போது அதில் மனித மலம் கலக்கப் பட்டிருப்பதை கண்டு வெங்கடேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

பனியன் துணியில் சுற்றப்பட்ட நிலையில் மனிதக் கழிவு தண்ணீர் தொட்டிக்குள் கண்டெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார் வெங்கடேஷ். மேலும் குடும்பப் பிரச்சனை காரணமாக தனது அண்ணி தான் குடிநீர் தொட்டிக்குள் மலத்தை வீசி இருப்பதாகவும் தனது புகாரில் தெரிவித்திருக்கிறார். இதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . குடும்பத் தகராறு காரணமாக தண்ணீர் தொட்டிக்குள் மலம் வீசிய சம்பவம் விருதாச்சலம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

அதிர்ச்சியில் பொதுமக்கள்..!! திடீரென உயர்ந்த அரிசி விலை..!! கிலோவுக்கு எவ்வளவு உயர்வு தெரியுமா..?

Thu Feb 1 , 2024
தமிழ்நாட்டில் அரிசி விலை அதிரடியாக உயர்ந்துள்ளதால், மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் காய்கறிகள், பூண்டு உள்ளிட்டவற்றின் விலை அதிகரித்து வந்த நிலையில், அரிசி விலையும் அதிகரித்து வருகிறது. கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.15 வரை விலை உயர்ந்து மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் 25 கிலோ அரிசி மூட்டையின் விலை ரூ.100 வரை அதிகரித்துள்ளதாக வணிகர்கள் தெரிவித்துள்ளனர். அண்டை மாநிலங்களில் இருந்து நெல் வரத்து குறைவு மற்றும் ஆந்திரா, கர்நாடகா […]

You May Like