fbpx

அடக்கொடுமையே..!! ரீ-ட்வீட் செய்தது குற்றமா..? மரண தண்டனை விதித்த நீதிமன்றம்..!! எங்கு தெரியுமா..?

உலகிலேயே அதிக மரண தண்டனை விதிக்கும் நாடுகளில் சீனா, ஈரானுக்கு அடுத்தபடியாக சவுதி அரேபியா உள்ளது. இங்கு மதத்திற்கு எதிராக பேசுவதோ அல்லது எழுதுவதோ மன்னிக்க முடியாத குற்றமாக பார்க்கப்படுகிறது. மேலும் போதைப் பொருட்கள், கடத்தல் உள்ளிட்ட விஷயங்களுக்கு உடனடியாக மரண தண்டனை விதிக்கப்படும். இந்நிலையில், சவுதி அரேபியாவில் ஒரு நபர் தன்னுடைய எக்ஸ் தளத்தில் அரசுக்கு எதிரான பதிவுகளை தொடர்ந்து மறுபதிவு செய்து வந்துள்ளார்.

அத்துடன் யூடியூப் தளத்திலும் பல கருத்துக்களைத் தெரிவித்து வந்துள்ளார். இந்நிலையில், அந்த நபருக்கு தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர் மதங்களுக்கு எதிராக செயல்பட்டதாகவும், சமூக பாதுகாப்பை சீர்குலைத்து விட்டதாகவும், பட்டத்து இளவரசரையே அவதூறாகப் பேசிவிட்டதாகவும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வாழ்க்கை விசாரித்த நீதிபதி அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இந்த தீர்ப்பை கேட்டு அதிர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள், இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஒருவர் மறுபதிவு செய்ததற்கெல்லாம் மரண தண்டனையா? என்று மனித உரிமை ஆராய்ச்சியாளர் ஜோய் ஷியா என்பவர் கூறினார். இதுகுறித்து, பேசிய லண்டனைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், “ட்வீட் செய்வதற்கெல்லாம் மரண தண்டனை வழங்குவது கொடூரமானது. சவுதி அரேபியாவில் அதிகரித்து வரும் அடக்குமுறைக்கு இது மிகப்பெரிய எடுத்துக்காட்டாகும்” என்றார்.

இதற்கு முன்னதாக சவுதி அரேபியா அரசுக்கு எதிராக பேசியதாக டாக்டர் பட்டம் பெற்ற ஒரு மாணவிக்கு, 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அந்த மாணவி சிறை தண்டனை அனுபவித்து வருவதற்கே கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இப்போது ட்வீட் செய்ததற்கு மரண தண்டனை என்பது சவுதியின் அடக்குமுறை ஆட்சியை எடுத்துரைப்பதாக மனித உரிமை குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Chella

Next Post

”இனி இவர்களும் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்”..!! போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் மாஸ் அறிவிப்பு..!!

Sat Sep 2 , 2023
பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்துப் பயணத் திட்டத்தை மலைப் பகுதிகளுக்கு விரிவுபடுத்துவது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு அத்தியாவசிய போக்குவரத்து சேவைகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் மூலம் குறைந்த கட்டணத்தில் அரசு வழங்கி வருகிறது. அனைத்து கிராம பகுதிகளுக்கும் பேருந்து வசதியை ஏற்படுத்தி, தடையற்ற போக்குவரத்து சேவையையும் அளித்து வருகிறது. அத்துடன், அரசு […]

You May Like