பொது வாழ்வில் மகாராணி மிகவும் இறுக்கமான முகத்துடன் , எப்போதும் சீரியசாகவே வைத்திருக்க வேண்டும் ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பல நேரங்களில் நகைச்சுவை உணர்வால் நம்மை ஒரு கணம் உற்றுப்பார்க்க வைத்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு 70வது ஆண்டு அரியணை விழா நடத்தப்பட்டது. இது தொடர்பாக கரடியுடன் ’’டீ ’’ அருந்துவது போல காட்சிகள் படம் எடுக்கப்பட்டது. அதில் எதிரே அமர்ந்துள்ள பேடிங் டன் கரடி தான் கையில் வைத்திருந்த சாண்ட்விச்சை எடுத்து இது எனக்கு மிகவும் பிடித்தமான ஸ்நாக் ’’ அவசர தேவைக்காக நான் இதை எப்போதும் வைத்திருப்பேன்’’ என எடுத்து ராணியிடம் கொடுக்கின்றது. பின்னர் ராணியும் ஒரு சாண்ட்விச்சை அவரது கைப்பையில் இருந்து எடுத்துக் காட்டி நானும் ஒன்று வைத்திருக்கின்றேன். என்பது போல ஒரு காட்சிகளை படம்பிடித்தனர்.
இதே போல 2012ம் ஆண்டின் ஒலிம்பிக் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஜேம்ஸ்பாண்டுடன் ஒரு வீடியோ கிளிப்பிங்கில் காட்சிகளை தொகுக்க அவர் நகைச்சுவை உணர்வுடன் பங்கேற்றிருந்தார்.
2016ம் ஆண்டு அவரது பேரன் இளவரசர் ஹாரியுடன் இன்விக்டிஸ் கேம்கள் பற்றிய ஒரு புரமோஷன் வீடியோவிலும் பங்கேற்று பேரனுடன் விளையாட்டாக உரையாடும் ஒரு காட்சியும் வைரலானது.
இதே போல எடன் பிராஜக்ட் என்ற திட்டத்தில் மிகப்பெரிய கேக்கை அவர் நீளமான கூர்வாளால் வெட்டுவது போல நகைச்சுவையாக உரையாடுவது அந்த வீடியோவும் வெளியாக வைரலானது.
ஆஸ்திரேலியாவில் ஹாக்கி விளையாட்டு வீராங்கனைகள் எடுக்கும் செல்பிக்கு பின்னால் அரசியார் வாய் நிறைய புன்னகையுடன் நின்று கொண்டிருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலானது என்பதும் குறிப்பிடத்தக்கது. இது போன்ற நிகழ்வுகள் மக்களின் மனதில் நீங்கா நினைவுகளாக இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய வீராங்கனைகள் இந்த புகைப்படத்தை பகிர்ந்து நிகைவுகூர்ந்துள்ளனர்