fbpx

3 வடிவத்திலும் சதம்..!! முதல் இந்திய கேப்டன்..!! புதிய சாதனை படைத்தார் ரோகித் சர்மா..!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்ததன் மூலம் ரோகித் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார்.

இந்தியா – ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான பார்டர்-கவாஸ்கர் கிரிக்கெட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. இதையடுத்து, முதல் இன்னிங்ஸில் 177 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன்பிறகு களமிறங்கிய இந்தியா அணி தனது பேட்டிங்கை தொடங்கியது. முதல்நாள் முடிவில் ரோஹித் சர்மா அரைசதத்துடன் களத்தில் இருந்தார். இன்று மீண்டும் போட்டி தொடங்கிய போது தொடக்கம் முதலே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரோஹித் சர்மா சதமடித்தார். இதில் 2 சிக்ஸர்கள் மற்றும் 15 பவுண்டரிகள் அடங்கும். 120 ரன்கள் அடித்திருந்த போது கம்மின்ஸ் பந்தில் போல்டாகி வெளியேறினார்.

இன்றைய போட்டியில் சதமடித்ததன் மூலம் ரோஹித் சர்மா தனது 9-வது சதத்தை பதிவு செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஒருநாள் போட்டி, டி20 மற்றும் டெஸ்ட் ஆகிய மூன்று வடிவத்திலும் சதமடித்த முதல் இந்தியா கேப்டன் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார்.

Chella

Next Post

நிம்மதியை கெடுத்த நிலநடுக்கம்..!! நெஞ்சை உலுக்கும் புகைப்படம்..!! இறந்த மகளின் கையை 3 நாளாக பிடித்திருந்த தந்தை..!!

Fri Feb 10 , 2023
துருக்கியில் புகைப்படக் கலைஞர் ஒருவர் எடுத்துள்ள புகைப்படம் ஒன்று நிலநடுக்கத்தின் கோரத்தை உலகுக்கு எடுத்துரைப்பதாக உள்ளது. துருக்கி, சிரியாவில் கடந்த திங்கட் கிழமை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தொட்டுள்ளது. துருக்கியியில் கட்டிட இடிபாடுகளில் இருந்து இறந்தவர்களின் உடல்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றன. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. உயிருடன் மீட்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். […]
நிம்மதியை கெடுத்த நிலநடுக்கம்..!! நெஞ்சை உலுக்கும் புகைப்படம்..!! இறந்த மகளின் கையை 3 நாளாக பிடித்திருந்த தந்தை..!!

You May Like