கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே கருங்கல் செல்லும் சாலையில் பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு கடந்த 20ஆம் தேதி கேரள பதிவு எண் கொண்ட இருசக்கர வாகனத்தில் 23 வயது இளைஞர் ஒருவர், தனது காதலியுடன் வந்தார். அந்த பெண் பெட்ரோல் நிலையத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் வந்து, கழிவறைக்கு செல்ல அனுமதி கேட்டார். அந்த ஊழியரும் அவரை அனுமதித்ததை அடுத்து அந்த பெண் கழிவறைக்குள் சென்றார். அந்த இளைஞர் கழிவறைக்கு வெளியே நின்று கொண்டிருந்தார்.
பின்னர் உள்ளே சென்ற இளம்பெண், சிறிது நேரம் கழித்து மெதுவாக கதவை திறந்து வெளியே காத்துக் கொண்டிருந்த காதலனை உள்ளே வரும்படி அழைத்துள்ளார். உடனே அந்த இளைஞரும் அவசர அவசரமாக கழிவறைக்குள் நுழைந்தார். பின்னர், இருவரும் கதவை பூட்டிக் கொண்டனர். இதனைப் பார்த்த பெண் ஊழியர் அதிர்ச்சி அடைந்தார். அவர்கள் எப்போது வெளியே வருவார்கள் என கவனிக்க தொடங்கினார்.
தொடர்ந்து 15 நிமிடமாகியும் அவர்கள் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெண் ஊழியர், அங்கு சென்று கதவை திறக்குமாறு கூறினார். ஆனால், அவர்கள் கதவை திறக்கவில்லை. இதையடுத்து, அவர் சத்தம் போட்டு சக ஊழியர்களை அழைத்தார். அவர்களும் வந்து கதவை திறக்குமாறு கூறினார். ஆனால், காதலர்கள் வெளியே வராமல் உள்ளே உல்லாசம் அனுபவித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. ஊழியர்கள் விடாமல் கழிவறையை சூழ்ந்து கொண்டு காதல் ஜோடியை வெளியே வருமாறு குரல் எழுப்பினர்.
தொடர்ந்து சத்தம் போட்டதால் அந்த ஜோடி பயந்து, வேறு வழியில்லாமல் இருவரும் வேர்க்க விறு விறுக்க அரைகுறை ஆடைகளுடன் வெளியே வந்தனர். உடனே அங்கு நின்ற பெட்ரோல் பங்க் ஊழியர்கள் இருவரையும் சுற்றி வளைத்தனர். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அதிர்ச்சி அடைந்த காதலர்கள் இருவரும் தாங்கள் வந்த வாகனத்தை அங்கேயே போட்டுவிட்டு நைசாக தப்பி ஓடிவிட்டனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அந்த வாகனம் கேரள பதிவு எண் என்பதால், அந்த ஜோடி கேரளாவை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.