கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே கொன்னக்குழிவிளை பகுதியைச் சேர்ந்த 47 வயதாகும் பெஞ்சமின் என்பவர் வெளிநாட்டில் கொத்தனாராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி சுனிதா (45). பெஞ்சமின் சுனிதா தம்பதிக்கு கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு கல்யாணம் நடந்தது. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை.
மனைவி மீது அதிக பாசம் வைத்திருந்த பெஞ்சமின், மனைவிக்காக புதிதாக வீடு ஒன்றை கட்டியிருக்கிறார். இதற்கிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு சுனிதா திடீரென வீட்டில் இருந்து காணாமல் போனாராம். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் சுனிதாவை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவர் குறித்து எந்தவொரு தகவலும் அவருக்கு கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து வெளிநாட்டில் இருந்து பெஞ்சமின் அவசர, அவசரமாக சொந்த ஊருக்கு வந்திருக்கிறார்.
ஆனால் அவர் வந்து தேடிய பின்னரும் மனைவி சுனிதா மாயமானது குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுபற்றி இரணியல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தார்கள். மனைவி காணாமல் போன விரக்தியில் இருந்து வந்த பெஞ்சமின், கடந்த 28-ந் தேதி திடீரென விஷம் குடித்து உயிரைவிட்டார். அதே சமயத்தில் சாவதற்கு முன்பு சமூகவலைதளத்தில் உருக்கமான வீடியோவை அவர் வெளியிட்டார்.
அந்த வீடியோவில்அவர் கூறுகையில், எஸ்பி அய்யா, 19 வருடங்களாக என் மனைவியை நான் ராணி மாதிரி வைத்திருந்தேன். ஆனால் அவள் கள்ளக்காதலனுடன் போய் விட்டார். கள்ளக்காதலனை விட்டு விடாதீர்கள். என் சாவுக்கு காரணமான இவர்களுக்கு தூக்கு தண்டனை வாங்கித்தாங்க. அதை நான் மேலே இருந்து நிச்சயம் பார்ப்பேன். என்னை கொஞ்சம், கொஞ்சமாக மனைவியின் கள்ளக்காதலன் கொன்றுள்ளான், எஸ்பி அய்யா, அவனை விட்டு விடாதீங்க. வியாகுல மாதா அன்னையாக உங்களை கருதுகிறேன்.
நடவடிக்கை எடுங்கள். இவ்வாறு கதறி அழுதபடி வீடியோ வெளியிட்டிருந்தார். மேலும் தனது மனைவி சுனிதா, அவருடைய கள்ளக்காதலன், சுனிதாவின் உறவினர் ஒருவர் சேர்ந்து என்னை மிரட்டியதாகவும் கூறியிருந்தார். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் சுனிதாவை நேற்று மணியன்குழி பகுதியில் வைத்து அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
Read more : ஐரோப்பிய ஒன்றியத்தில்.. ஐபோன் பயனர்கள் ஆபாச செயலியை பதிவிறக்கம் செய்யலாம்..!! – ஐபோன் நிறுவனம் அதிருப்தி