fbpx

மனைவியை வேறொருவருடன் செக்ஸ் வைத்துக் கொள்ள வற்புறுத்தும் கணவன்..!! என்ன காரணம் தெரியுமா..?

தங்களுக்கு குழந்தை பிறக்காததால், குழந்தை வேண்டும் என்று வேறொருவருடன் உடலுறவு வைத்துக் கொள்ளும் படி மனைவியை வற்புறுத்தி வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் யாதகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பீமண்ணா (32). இவருடைய மனைவி பஸவம்மா. இருவருமே கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வரும் நிலையில், திருமணமாகி நான்கைந்து வருடங்களாகியும் குழந்தை இல்லை என்கிற வருத்தம் இருந்து வந்துள்ளது. ஒரு கட்டத்தில், நமக்கு கண்டிப்பாக குழந்தை வேண்டும். இதனால் பிற ஆண்களுடன் உடலுறவு வைத்துக் கொண்டு குழந்தை பெற்றுக் கொடு என்று பஸ்வம்மாவை, கணவர் பீமண்ணா தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கு பஸம்மா ஒத்துக்கொள்ளவில்லை.

தொடர்ந்து தனது மனைவியை பிறருடன் உடலுறவு வைத்துக் கொள்ளுமாறு கூறி வந்த நிலையில், இருவருக்கும் இடையே கைகலப்பு வரை போய் அவரது மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டார். பின்னர் மனைவியின் பெற்றோரைத் தொடர்பு கொண்டு, உங்கள் மகள் பஸவம்மா மூச்சுப் பேச்சின்றி கிடப்பதாக கூறியுள்ளார். மேலும், பீமண்ணா அவரது மனைவியை மருத்துவமனைக்கும் தூக்கிச் சென்றுள்ளார்.

இதையடுத்து, மருத்துவமனையில் பஸவம்மாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், பஸவம்மாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் பஸவம்மா கழுத்து நெறித்துக் கொலை செய்யப்பட்டது உறுதியானது.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில், கணவர் பீமண்ணாவின் செல்போனை பறிமுதல் செய்து சோதனை செய்தனர். அதில் அவர் கடன் வாங்கி உள்ளவர்களிடம் தனது மனைவியை உடலுறவு வைத்துக் கொள்ளும்படி தொடர்ந்து வற்புறுத்திய ஆடியோ பதிவாகியிருந்தது. அதன் பேரில் பீமண்ணாவை கைது செய்து சிறையில் அடைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More : மாநாடு தேதியை விஜய் கன்பார்ம் பண்ணிட்டாராமே..!! பரபரக்கும் அரசியல் களம்..!! வெளியாகும் அறிவிப்பு..!!

English Summary

The incident of forcing the wife to have sex with someone else in order to have a child because they did not have a child has caused great shock.

Chella

Next Post

வெறும் ரூ.1000... மத்திய நிதி அமைச்சர் மாணவர்களுக்கு இன்று தொடங்கி வைக்க போகும் அசத்தல் திட்டம்...!

Tue Sep 17 , 2024
Union Finance Minister is going to launch a crazy scheme for students today

You May Like