fbpx

‘திருமணத்திற்கு பிறகு கணவர் அவரது தாய்க்கு பணம் தருவது குடும்ப வன்முறை அல்ல’..!! மனைவியின் மனுவை நிராகரித்த கோர்ட்..!!

மும்பை ‘மந்த்ராலயா’வில் (மாநில செயலகம்) உதவியாளராக பணிபுரியும் பெண் ஒருவர், தனது கணவர் மற்றும் மாமியார் மீது புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், தன் மாமியாருக்கு மனநோய் இருப்பதாகவும் அதனை மறைத்து ஏமாற்றித் தன்னைத் திருமணம் செய்துகொண்டதாகவும் கூறியிருக்கிறார். மேலும், தனது கணவர் 1993 முதல் 2004 வரை வெளிநாட்டில் தங்கி இருந்ததாகவும், பின்னர் அவர் விடுப்பில் இந்தியா வரும்போதெல்லாம் அவரின் தாயை மட்டும் சந்திப்பதும், ஆண்டுதோறும் ரூ.10,000 தொகையை அவருக்கு அனுப்புவதை வழக்கமாகக் கொண்டதாகவும், அவரின் கண் அறுவை சிகிச்சைக்காகப் பணம் செலவழித்ததாகவும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவர் கணவர் அளித்த பதிலில், ”என் மனைவி என்னை ஒருபோதும் கணவனாகப் பார்த்ததில்லை. எனக்கே தெரியாமல் தன் என்.ஆர்.இ. கணக்கில் இருந்து ரூ.21.68 லட்சத்தை எடுத்து ஒரு பிளாட் வாங்கியுள்ளார்” என குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அவர், தன் மனைவிக்கு விவாகரத்து கோரி நோட்டீஸ் அனுப்பி உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக அந்தப் பெண் அளித்த மனு நிலுவையில் இருந்தபோது அவருக்கு மாதம் ரூ.3,000 இடைக்கால பராமரிப்பு வழங்கியிருந்தது.

தற்போது இந்த வழக்கின் மற்ற சாட்சிகளை விசாரித்துப் பதிவு செய்ததன் அடிப்படையில், நீதிமன்றம் அவரது மனுவை நிராகரித்துள்ளது. மேலும், வழக்கு நிலுவையில் இருந்தபோது அவருக்கு வழங்கப்பட்ட இடைக்கால உத்தரவுகளும், நிவாரணங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து அந்தப் பெண் அமர்வு நீதிமன்றத்தில் கிரிமினல் மேல்முறையீடு செய்தார். இருப்பினும் சாட்சிகளை ஆய்வு செய்ததில், பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் தெளிவில்லாமல் இருப்பதாலும், அவர்கள் பெண்ணைக் குடும்ப வன்முறைக்கு உட்படுத்தினார்கள் என்பதற்குத் தகுந்த ஆதாரங்கள் இல்லை எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்த வழக்கின் விசாரணையில் நீதிமன்றம், “அந்தப் பெண்ணிற்கு தன் கணவர் அவர் அம்மாவிற்குப் பணம் கொடுக்கிறார் என்பதையும், அவருடன் நேரம் செலவிடுகிறார் என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால், இதன் அடிப்படையில் அவர் குடும்ப வன்முறைக்கு உட்படுத்தப்பட்டார் என்று கூறுவதில் நியாயம் இல்லை. இந்த விசாரணை, தன் கணவர் விவாகரத்து கோரி நோட்டீஸ் அனுப்பிய பின்னரே தொடங்கப்பட்டுள்ளது. மேலும், குடும்ப வன்முறையில் இருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டத்தின்கீழ் எந்த நிவாரணத்திற்கும் அந்தப் பெண்ணுக்கு உரிமை இல்லை.

அந்தப் பெண்ணின் மகள் திருமணமாகாதவர் என்பதாலேயே அவருக்கு பராமரிப்புத் தொகை வழங்கப்படலாம் என்ற வாதத்தையும் ஏற்க முடியாது” என்று நீதிமன்றம் கூறியுள்ளது. இதனை தொடர்ந்து நீதிபதி மேலும் கூறுகையில், ”விசாரணை நீதிமன்றத்தின் தடை செய்யப்பட்ட தீர்ப்புக்கு, இந்த நீதிமன்றத்தின் தலையீடு தேவையில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

’நம்ம வரலாறு பெருசு’..!! திமுக முன்னாள் எம்பி வேணுகோபால் காலமானார்..!! தலைவர்கள் இரங்கல்..!!

Thu Feb 15 , 2024
திமுக முன்னாள் எம்.பி. வேணுகோபால் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். திருப்பத்தூர், திருவண்ணாமலை தொகுதிகளில் எம்.பியாக இருந்தவர் வேணுகோபால். 2009 லோக்சபா தேர்தலில் மிக அதிக வித்தியாசத்தில் பாமகவின் காடுவெட்டி குருவை தோற்கடித்தவர் இவர். திமுக மூத்த நிர்வாகியான வேணுகோபால், திமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 5 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். 1977 மற்றும் 1984இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் தண்டராம்பட்டு தொகுதியில் வென்று […]

You May Like