ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த ரமேஷ், அங்குள்ள காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கும் இவரது மனைவி ஷுவானிக்கும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஷிவானிக்கும் அருகே வசித்து வந்த கார் ஓட்டுநரான ராமாராவ் என்பவருக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இது குறித்து ரமேஷுக்கு தெரிய வந்த நிலையில், அவர் இருவரையும் கடுமையாக கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும் ரமேஷை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி வேலை முடிந்து வீட்டுக்கு வந்த ரமேஷுக்கு மனைவி மது ஊற்றி கொடுத்துள்ளார். போதையில் அவர் உறங்கச் சென்ற நிலையில், ராமராவ் அவரது நண்பர் நீலா ஆகியோருடன் சேர்ந்து கணவனை தலையணையால் அழுத்தி மூச்சு திணற வைத்து கொலை செய்துள்ளனர். அடுத்த நாள் ரமேஷ் மாரடைப்பால் உயிரிழந்ததாக நாடகமாடிய நிலையில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவர்கள் பாணியில் விசாரித்துள்ளனர். இதையடுத்து அவரது மனைவி ஷிவானி உண்மையை சொன்னதன் அடிப்படையில் மூவரும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.