விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள தடுத்தாட்கொண்டூர் கிராமத்தில் ஆரோக்கிய சாமி மற்றும் அவருடைய மனைவி பெரியநாயகி உள்ளிட்டோர் வசித்து வந்தனர். இந்த நிலையில், தன்னுடைய கணவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது பெரிய நாயகிக்கு தெரிய வந்ததால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த கள்ளத்தொடர்பு சம்பந்தமாக திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தில் பெரியநாயகி புகார் வழங்கிய போது கணவன், மனைவிக்குள் சமாதானமாக போகுமாறு எச்சரித்து காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். இத்தகைய நிலையில் கடந்த 24ஆம் தேதி மறுபடியும் கணவர் கள்ளத்தொடரில் இருந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.
இதனை அறிந்து கொண்ட பெரியநாயகி இது தொடர்பாக கணவரிடம் கேள்வி எழுப்பிய போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது இதில் ஆத்திரம் கொண்ட கணவர், அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த குழம்பை எடுத்து மனைவியின் மீது ஊற்றி இருக்கிறார் இதில் துடி துடித்து போன பெரியநாயகி வலியை தாங்க முடியாமல் கூச்சலிட்டு இருக்கிறார்.
அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பெரியநாயகியை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆகவே பெரியநாயகி வழங்கிய புகாரை அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.