கர்நாடக மாநிலம் சிக்க பல்லாப்பூர் மாவட்டத்தில் இருக்கின்ற பட்ல பள்ளியைச் சேர்ந்தவர் விஜய் (35) துணி வியாபாரியான இவருக்கு மாலா (28) என்ற பெண்ணுடன் கடந்த சில வருடங்களுக்கு முன்னால் திருமணம் நடைபெற்றது.
விஜய் சிந்தாமணி என்ற பகுதியில் துணி வியாபாரம் செய்து வருகின்ற நிலையில் அவருக்கும் மாதேஷ் (32) என்ற மற்றொரு துணி வியாபாரிக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. மாண்டியாம்பள்ளி என்ற பகுதியைச் சேர்ந்த மாதேஷும் சிந்தாமணி பகுதியில் துணி வியாபாரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
தொழில் ரீதியாக இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் குடும்ப ரீதியாக அந்த பழக்கம் நட்பாக மாறியிருக்கிறது. இந்த நிலையில், மாரேஷுக்கும் விஜயின் மனைவி மாலாவுக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இது விஜய்க்கு தெரிய வந்ததால் இருவரையும் கண்டித்து இருக்கிறார்.
ஆனாலும் அதனை அவர்கள் இருவரும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் பழகி வந்த நிலையில், இது விஜய்க்கு கடுமையான கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆகவே இருவரையும் பழிவாங்க வேண்டும் என்று திட்டமிட்டு, விஜய் கடந்த 19ஆம் தேதி மாலை மது அருந்துவதற்கு அழைத்திருக்கிறார். நெறிச்சூடிய ஒரு பகுதிக்கு அவரை விதை அழைத்துச் சென்றுள்ளார். அப்போது விஜயின் நண்பர்கள் சிலரும் அந்தப் பகுதியில் இருந்ததாக கூறப்படுகிறது.
மாரேஷ் குடிபோதையில் இருந்த போது, திடீரென்று தான் வைத்திருந்த கத்தி எடுத்து மாதேஷ் கருத்தை அடுத்துள்ளார் கழுத்திலிருந்து வழியும் ரத்தத்தை குடித்து இதை தன்னுடைய நண்பர்களை வீடியோ எடுக்க தெரிவித்துள்ளார். அதன் பிறகு மாரேஷை அங்கேயே விட்டுவிட்டு அனைவரும் தப்பி சென்று விட்டனர்.
இந்த நிலையில் தான் உயிருக்கு ஆபத்தான நிலையில், இருந்த மாரேஷை அந்த பகுதி வழியாக வந்த மக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்களின் தீவிர சிகிச்சையின் மூலமாக மாரேஷ் உயிர் பிழைத்தார். இதற்கு நடுவே இன்று சம்பவத்தின் பகீர் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது உடனடியாக காவல்துறையினரின் கவனத்திற்கு சென்ற நிலையில், விஜயை காவல்துறையினர் கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.