தனது மனைவியை உயர்கல்வி படிக்கவோ அல்லது வேலைக்கு செல்ல வேண்டும் என்று கணவன் கோருவதை கொடுமையாகக் கருத முடியாது என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது..
கர்நாடகாவை சேர்ந்த தம்பதியினர் அமெரிக்காவில் வசித்து வந்தனர். குடும்பத்தை நடத்தவும், மாதாந்திர செலவுகளை சமாளிக்கவும், தனக்கு வேலை தேடி, மேற்படிப்பு படிக்கும்படி கணவர் வற்புறுத்துவதாக மனைவி புகார் அளித்திருந்தார்.. இதுதொடர்பான வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், கணவர் மற்றும் அவரது தாயாருக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டது..
இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கணவர் மேல்முறையீடு செய்தார்.. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது “அதிக அறிவைப் பெறவும், மேற்படிப்பைத் தொடரவும் கணவன் மனைவிக்கு ஆலோசனை கூறுவது எப்படி கொடுமையானது என்பதை புரிந்து கொள்ள முடியும்” என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.. மேலும் “ திருமணத்திற்கு முன்னர் தனது கணவருடன் இதுகுறித்து கலந்துரையாடியதாகவும், திருமணத்தின் பின்னர் கணவருடன் அமெரிக்காவில் இணைந்து கொள்வதாகவும் மனைவியே நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.. மேலும் கணவன் எங்கும் திடீரென்று வேலை வாங்கித் தரும்படியோ, படிக்கும்படியோ வற்புறுத்தவில்லை.
இரு தரப்பினரும் இறுதியில் அமெரிக்காவில் வசிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக, வேலை மற்றும் எச்1 விசாவைப் பெறுமாறு கணவர் கேட்டுக் கொண்டுள்ளார்.. இதற்காக அந்த கணவர் வேலைக்கு செல்ல கூறியுள்ளார்.. வெளிநாட்டில் குடியேறுவதற்கு கணவர் தேவையற்ற முக்கியத்துவம் கொடுத்தாலும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும், அதை கொடுமையாக கருத முடியாது..” என்று தெரிவித்தார்..