fbpx

’உன்ன நம்பி தான் இதுக்கு சம்மதிக்கிறேன்’..!! ஆடு மேய்க்க சென்ற சிறுமியை அம்மாவாக்கிய நபர்..!!

கரூர் மாவட்டம் குரும்பபட்டியை அடுத்த ஒலிகரட்டூரில் 9ஆம் வகுப்பு வரை படித்துள்ள சிறுமி, வீட்டில் இருக்கும் ஆடுகளை மேய்ச்சலுக்காக அருகில் உள்ள காட்டிற்கு அழைத்துச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அப்போது அதே கிராமத்தில் வசிக்கும் மகேஷ் என்கின்ற மகேஷ்வரன் (வயது 40) அதே காட்டில் ஆடு மேய்க்க வந்துள்ளார்.

அப்போது, சிறுமியை காதலிப்பதாக கூறி பழகி வந்துள்ளார். பிறகு திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி கடந்த 2021ஆம் ஆண்டு தீபாவளி தினத்தன்று சிறுமிடம் பாலியல் உறவு வைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து ஒரு வருடமாக அவரிடம் நெருங்கி பழகியதால் சிறுமி கர்ப்பமானார். இதனை வீட்டில் சொல்லக் கூடாது என மகேஷ் சொல்லி இருந்ததால் சிறுமியும் யாரிடமும் சொல்லாமல் மறைத்துள்ளார்.

ஒரு கட்டத்தில் சிறுமியின் கை, கால்கள் வீங்கிய நிலையில், வயிற்று வலி ஏற்பட்டதால் அவரை கரூர் காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். கடந்த 14.02.2023 அன்று சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து, பெற்றோர் குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு வந்த அலுவலர்கள் சிறுமியிடம் விசாரித்த பிறகு கரூர் ஊரக உட்கோட்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மகேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இறுதி விசாரணையில் குற்றவாளிக்கு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழ்நாடு அரசு 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் பரிந்துரை செய்து நீதிபதி நசீமா பானு தீர்ப்பளித்தார்.

Chella

Next Post

உரிமைத்தொகை ரூ.1,000 வழங்குவதில் மாற்றம்..? தமிழ்நாடு அரசு எடுத்த புதிய முடிவு..!!

Sat Nov 18 , 2023
தமிழ்நாட்டில் தற்போது மகளிருக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில் பெண்களுக்கு 3 தவணைக்கான பணம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த தொகை கிடைக்காதவர்கள் மேல்முறையீடு செய்து வருகின்றனர். இந்த மாதம் தீபாவளியை முன்னிட்டு முன்கூட்டியே ரூ.1,000 வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு விட்டது. இந்த உரிமைத்தொகை குடும்ப தலைவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்நிலையில், பெண்களுக்கு மேலும் பயனுள்ளதாக மாற்றும் வகையில் குடும்ப தலைவிகளுக்கு மாத துவக்கத்திலேயே […]

You May Like