fbpx

’நான் தான் ஜெயலலிதாவின் அண்ணன்’..!! சொத்தில் பங்கு கேட்டு 83 வயது முதியவர் பரபரப்பு மனு..!!

ஜெயலலிதாவின் சொத்துக்களில் தனக்கும் பங்கு வேண்டும் என ஜெயலலிதாவின் அண்ணன் என்று கூறி வாசுதேவன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்த 83 வயதான வாசுதேவன் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சகோதரர் தாம் தான் என்றும், ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமனின் முதல் மனைவியினுடைய மகன் என்றும் தெரிவித்துள்ளார். தமது தந்தை ஜெயராமன் 2-வது மனைவியாகத்தான் வேதவள்ளி என்கிற வேதம்மாவை திருமணம் செய்து கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். இரண்டாவது மனைவிக்கு பிறந்தவர்கள் தான் ஜெயக்குமார் மற்றும் ஜெயலலிதா என்றும் ஜெயக்குமாரின் வாரிசுகள்தான் தீபா மற்றும் தீபக் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்து வாரிசுரிமைச் சட்டப்படி தமக்கும் ஜெயலலிதாவின் சொத்தில் பங்கு உள்ளது என்று வாசுதேவன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். காலதாமதமாக தாக்கல் செய்யப்படும் இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த மனுவை பட்டியலிடுவது தொடர்பாக தீபா, தீபக் ஆகியோர் பதிலளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை பிப்ரவரி 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

Chella

Next Post

’தளபதி 67’ படத்தின் தரமான அப்டேட்..!! வில்லன் யார் தெரியுமா..? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

Tue Jan 31 , 2023
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ’தளபதி 67’ படத்தின் மெயின் வில்லன் யார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் தற்போது ’தளபதி 67’ பற்றி தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதற்கு காரணம், தளபதி 67 படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளது. நேற்று இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில், இன்று இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பை தொடர்ந்து வெளியிட […]
’தளபதி 67’ படத்தின் தரமான அப்டேட்..!! வில்லன் யார் தெரியுமா..? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

You May Like