fbpx

”நான் இறக்கவில்லை”..!! ”அப்படி சொன்னது தவறுதான்”..!! பரபரப்பு வீடியோவை வெளியிட்ட பூனம் பாண்டே..!!

பாலிவுட் நடிகை பூனம் பாண்டே நேற்று இறந்துவிட்டார் என செய்தி வெளியானது. இது திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், தான் உயிருடன் இருப்பதாக அவரே இன்று ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

பாலிவுட்டில் சர்ச்சை நாயகியாக வலம் வந்தவர் பூனம் பாண்டே (32). நேற்று இவர் கர்பப்பை வாய் புற்றுநோயால் காலமாகி விட்டதாக செய்தி வெளியானது. இந்தத் தகவல் அவரது அதிகாரப்பூர்வ சமூகவலைதளப் பக்கத்தில் பகிரப்பட்டிருந்ததால், இதை உண்மை என்றே உறுதி செய்தனர் ரசிகர்கள். இவரின் இறப்புச் செய்தி அவரது குடும்ப உறுப்பினர்களாலேயே சமூகவலைதளப் பக்கத்தில் பகிரப்பட்டிருந்ததாக பாலிவுட் ஊடகங்கள் தெரிவித்தன.

இந்நிலையில்தான் நடிகை பூனம் பாண்டே, தான் இறக்கவில்லை என்று பகீர் வீடியோ ஒன்றை தனது வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “நான் கர்பப்பை வாய் புற்றுநோயால் இறந்துவிட்டேன் என்று சொன்னது மிகப்பெரிய தவறுதான். ஆனால், அதன் நோக்கம் என்ன? இந்த செய்தியை கேட்டதும் பலரும் கர்பப்பை வாய் புற்றுநோய் பற்றி பேசினோம் இல்லையா? இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே என் நோக்கம். மற்ற புற்றுநோய் போல இது உங்களின் உயிரை அவ்வளவு சீக்கிரம் எடுத்துவிடாது. இதனை சரியான மருத்துவத்தின் மூலம் குணப்படுத்தலாம். அதனால், இதுபற்றி நீங்கள் நிச்சயம் தெரிந்கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இவர் பேச வந்த விஷயம் நல்லதுதான் என்றாலும், அதை இப்படியா சொல்ல வேண்டும் என்றும், இதுபோன்ற பப்ளிசிட்டி ஆபத்து என்றும் ரசிகர்கள் அவரைத் திட்டி வருகின்றனர். அவர் இறந்துவிட்டார் என்று செய்தி வெளியானாலும் அவர் இறக்கவில்லை என்ற சந்தேகத்தையும் ரசிகர்கள் கிளப்பினர். ஏனெனில், அவரது தங்கை ஷ்ரதா பாண்டே, குடும்ப உறுப்பினர்கள், மேனேஜர் என யாரையுமே மேலதிக தகவல்களுக்காக தொடர்பு கொள்ள முடியவில்லை.

மேலும், பூனம் இறந்து விட்டார் என்றால் அவரது இறுதிச் சடங்குகள் பற்றிய விவரங்கள் எதுவும் ஏன் தெளிவுப்படுத்தப்படவில்லை என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது. இவ்வளவு நாட்கள் தெம்பாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் வீடியோ பதிவிட்டு வந்த பூனம், தனக்கு இதுபோன்ற நோய் இருப்பதாக ஒருமுறை கூட சொல்லவில்லையே என்றும் அவர் மருத்துவமனையில் ஏதும் சிகிச்சை பெற்றாரா என்றும் ரசிகர்கள் அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டு வந்தனர். இந்த சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் ஒரே வீடியோவில் பதில் கொடுத்திருக்கிறார் பூனம் பாண்டே.

Chella

Next Post

’யாருமே எதிர்பார்க்கல’..!! ஓபிஎஸ்-சசிகலா திடீர் சந்திப்பு..!! என்ன பேசினார்கள்..? வெளியான பரபரப்பு தகவல்..!!

Sat Feb 3 , 2024
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், திமுக நிறுவனத் தலைவருமான பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு மெரினா கடற்கரை அருகே உள்ள அண்ணா நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திமுக அமைச்சர்கள், சசிகலா, அமமுக பொதுச்செயலாளர் தினகரன் மற்றும் தொண்டர்கள் இன்று மலர்தூவி மரியாதை செய்தனர். இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம், அண்ணா நினைவிடத்தில் மரியாதை […]

You May Like