fbpx

’நான் கணவருடன் இல்லை’..!! ’என் மகன் மாற்றுத்திறனாளி’..!! ’நான் இல்லாமல் அவன் இருக்க மாட்டான்’..!! கண்கலங்கிய கஸ்தூரி..!!

தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக நடிகை கஸ்தூரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் நேற்று முன்தினம் ஹைதராபாத் அருகே கைது செய்யப்பட்டார். போலீசார் கைது செய்ய சென்றபோது கஸ்தூரி கதவை திறக்காமல் இருந்ததாகவும், கைதுக்கு பின் மகனை நினைத்து கண்கலங்கியதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என கஸ்தூரி சென்னை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணையின் போது, தெலுங்கு பேசினாலும் அந்த மக்களும் தமிழகத்தின் ஒரு பகுதியினர் தான் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தார். மேலும், கஸ்தூரியின் ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், கஸ்தூரி தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, பப்பலகுண்டாவில் திரைப்பட தயாரிப்பாளர் ஹரி கிருஷ்ணனின் பங்களாவில் தங்கியிருந்த அவரை சென்னை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து அவர், சென்னை அழைத்து வரப்பட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதியிடம் கணவர் ஆதரவில்லாமல் தான் தனிமையில் வசித்து வருவதாகவும், தனக்கு மாற்றுத்திறனாளி மகன் உள்ளதாகவும், அவன் ஹைதராபாத்தில் படித்து வரும் நிலையில், தான் அங்கே இருந்ததாகவும் கூறியிருந்தார்.

மேலும், தன்னை சிறையில் அடைத்தால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கேட்டார். ஆனால், அவரது வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், போலீசார் கைது செய்ய சென்றபோது கதவைத் திறக்காமல் கஸ்தூரி அடம் பிடித்ததோடு மகனை நினைத்து கண்கலங்கியுள்ளார். தயாரிப்பாளர் ஹரி கிருஷ்ணனின் பங்களாவில் உள்ள வீட்டு அறையில் கஸ்தூரி தங்கியிருந்த நிலையில், போலீசார் வருவதை தெரிந்து கொண்டு கதவை உட்புறமாக தாளிட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

போலீசார் கதவை தட்டியும் திறக்காததால் உடைத்துக் கொண்டு உள்ளே வருவோம் என எச்சரித்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து, வெளியே வந்த கஸ்தூரியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அதைத்தொடர்ந்து ஹைதராபாத்தில் இருந்து அவரை சென்னைக்கு அழைத்து வந்த போது நான் இல்லாமல் தனது மகன் இருக்க மாட்டான் என கண் கலங்கியதாகவும், இரவு உணவு எதுவும் சாப்பிடாமல் வெறும் சாண்ட்விச், ஜூஸ் மட்டுமே வாங்கி குடித்ததாக கூறப்படுகிறது.

Read More : மாஞ்சா நூலில் பட்டம் விட்ட மாணவர்கள்..!! குழந்தையின் கழுத்தை அழுத்ததால் பரபரப்பு..!! சென்னையில் அதிர்ச்சி..!!

English Summary

He asked for bail as the child will be harmed if he is jailed.

Chella

Next Post

7ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை கடத்திச் சென்று பலாத்காரம்..!! 2 குழந்தைகளுக்கு தந்தையான நபர் போக்சோவில் கைது..!!

Mon Nov 18 , 2024
The man who kidnapped and raped the girl was arrested by the police in Poxo.

You May Like