fbpx

நான் அரசியலில் இருந்து விலக தயார்..! நீங்கள் தயாரா? அமைச்சர் பிடிஆருக்கு சவால் விட்ட செல்லூர் ராஜூ..!!

கடந்த ஆட்சியில் கூட்டுறவுத் துறையில் ஊழல் நடந்ததாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறிய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், நான் அரசியலில் இருந்து விலக தயார் என செல்லூர் ராஜூ சவால் விடுத்துள்ளார்.

வரும் 29ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மதுரையில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகள் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஆலோசனை மேற்கொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”கடந்த ஆட்சியில் கூட்டுறவுத் துறையில் 15 ஆயிரம் கோடி ஊழல் நடந்ததாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறிய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், நான் அரசியலில் இருந்து நிச்சியமாக விலக தயார். கூட்டுறவுத் துறையில் முறைகேடு நிரூபிக்கவில்லை என்றால் நிதியமைச்சர் அரசியலில் இருந்து விலகி கொள்ள தயாரா? என கேள்வி எழுப்பினார்.

நான் அரசியலில் இருந்து விலக தயார்..! நீங்கள் தயாரா? அமைச்சர் பிடிஆருக்கு சவால் விட்ட செல்லூர் ராஜூ..!!

கூட்டுறவுத் துறையில் அதிகாரிகள் பரிந்துரையில் நகைக்கடன், பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், எப்படி தகுதி இல்லாதவர்களுக்கு தள்ளுபடி செய்ய முடியும். அதிமுக ஆட்சியில் களங்கம் இல்லாமல் துறை செயல்பட்டு உள்ளது. கூட்டுறவு துறையில் சிறப்பாக செயல்பட்டமைக்கு அதிமுக ஆட்சியில் மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்ட 27 விருதுகளை தமிழக அரசு சார்பில் பெற்றுள்ளோம். அதிமுக ஆட்சியில் கூட்டுறவு துறையில் ஊழல் நடந்துள்ளதை நிரூபிக்க தயராக இருக்க
வேண்டும். நிதி அமைச்சருக்கான தகுதி இல்லாத நபரை நிதி அமைச்சராக திமுக நியமித்துள்ளது. தமிழகத்தில் வரி உயர்வுக்கு காரணமே நிதி அமைச்சர் தான். 48 லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்வதாக கூறிவிட்டு, 13 லட்சம் பேருக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது”. இவ்வாறு அவர் கூறினார்.

Chella

Next Post

அங்கிதா பந்தாரி உடலை வாங்க மறுப்பு.. இறுதி அறிக்கை வரும் வரை காத்திருப்பு..

Sun Sep 25 , 2022
அங்கிதா பந்தாரி கொலை வழக்கில் இறுதிச் சடங்கு செய்வதற்கு அவரது உடலை பெற்றோர்கள் வாங்க மறுத்துள்ளனர். உத்தரகண்டில் பவுரி மாவட்டத்தில் 19 வயது இளம் பெண் கடந்த 6 நாட்களுக்கு முன் காணாமல்போனார். இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து நேற்று ரிசார்ட்டில் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அங்கிதா பந்தாரியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சித்தது தெரியவந்தது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ரிசப்ஷனிஸ்டான அங்கிதா பந்தாரியை கொலை செய்து […]

You May Like