fbpx

”ஐ ஆம் சாரி ஐய்யப்பா”..!! ”பயம் காட்டி அடக்கி வைக்க பழைய காலம் இல்லப்பா”..!! சர்ச்சையில் சிக்கிய பிக்பாஸ் இசைவாணி..!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் கானா பாடகி இசைவாணி. இவருடைய கானா பாடல்கள் பெண்கள் அடிமை, பெரியார் தத்துவம், சுய கௌரவம் என்று பல வகைகளில் இருக்கும். சென்னையிலே பிறந்து வளர்ந்த இசைவாணி, பல ஆண்டுகளாக கானா பாடல் பாடி வருகிறார். ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாகத்தான் இவர் பெரிய அளவில் பிரபலமானார்.

இவர், தன்னுடன் கானா பாடி கொண்டிருந்த சதீஸ் என்பவரை காதலித்து 2019ஆம் ஆண்டு திருமணம் செய்த நிலையில், ஒரே ஆண்டில் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய திருமண வாழ்க்கையை பற்றி எந்த இடத்திலும் இசைவாணி வாய் திறக்கவில்லை. பிறகு சில மாதங்கள் கழித்து தன்னுடைய முன்னாள் கணவர் தனக்கு பிரச்சனை கொடுப்பதாக போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்திருந்தார். இது பெரிய அளவில் பேசப்பட்டது.

இந்நிலையில், ஐயப்ப பக்தர்கள் உணர்வை சீண்டும் வகையில் இசைவாணி பாடல் பாடி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். பொதுவாக ஐயப்பன் கோவிலுக்கு 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் மற்றும் 60 வயதை கடந்த பெண்கள் மட்டும்தான் செல்ல வேண்டும். ஆண்கள் எல்லா வயதினரும் கலந்து கொண்டாலும் பெண்கள் இந்த சன்னதிக்கு செல்வதற்கு சில கட்டுப்பாடுகள் உள்ளது.

ஆனால், பெண்கள் இளம் வயதில் வந்தால் என்ன தப்பு என்று கேட்கும் வகையில் பாடல் வரிகள் இருக்கிறது. அதாவது “ஐ ஆம் சாரி ஐயப்பா… நான் உள்ளே வந்தால் என்னப்பா.. பயம் காட்டி அடக்கி வைக்க பழைய காலம் இல்லப்பா.. நான் தாடிக்காரன் பேபி… இப்ப காலம் மாறிப்போச்சு… இனி தள்ளி வச்சா தீட்டா.. நான் முன்னேறுவேன் மாஷா..” என்று பாடலை பாடியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் பா.ரஞ்சித்தின் நீலம் கலாச்சார மையம் சார்பில் நடத்தப்பட்டு வரும் மார்கழியில் மக்கள் இசை என்கிற இசை நிகழ்ச்சியில் தான் இசைவாணி இப்படி ஒரு பாடலை பாடி இருக்கிறார்.

இந்த பாடலுக்கு பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். கார்த்திகை மாதம் பிறந்தாலே சபரிமலை ஐயப்பன் சாமிக்கு மாலை அணிந்து உடலையும், மனதையும் தூய்மையாக வைத்துக் கொண்டு இரண்டு மாதம் கடுமையாக விரதம் இருந்து லட்சக்கணக்கான மக்கள் சபரிமலைக்கு செல்கிறார்கள். இதில் சில சம்பிரதாயங்கள் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் நிலையில், அதை உடைக்கும் வகையில் இசைவாணி பாடி இருக்கிறார் என்று பலரும் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.

Read More : உயிருள்ள விஷப் பாம்பை உணவாக சாப்பிடும் ஒட்டகம்..!! என்ன காரணம் தெரியுமா..? தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க..!!

English Summary

He has been embroiled in controversy for singing a musical song that offended the sentiments of Lord Ayyappa devotees.

Chella

Next Post

"காசுக்காக நீ அவன்கூட படுக்கணும்" கட்டாயப்படுத்திய கணவன்; மறுப்பு தெரிவித்த மருமகளை கடத்தி சென்று, மாமியார் செய்த காரியம்..

Sat Nov 23 , 2024
woman-was-forced-to-have-relationship-with-a-stranger

You May Like