ஆந்திர மாநிலத்தில் விசாகப்பட்டினம் கொத்தவலசை என்கிற பகுதியைச் சேர்ந்த பெண் ஸ்ரவானி. 27 வயதான இந்த பெண் திருமணமானவர். இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திருமணம் ஆன ஒரு வருடத்திலேயே அவரைப் பிரிந்து வாழ்ந்து வந்திருக்கிறார். விசாகப்பட்டினத்தில் ஜெகதம்பா பகுதியில் இருக்கும் செருப்பு கடையில் அந்த பெண் வேலை செய்து வந்துள்ளார். அப்போது ஓவியர் கோபால் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கோபாலும் ஸ்ரவாணியும் நெருங்கி பழக ஆரம்பித்துள்ளனர். பின்னர் இருவரும் தனியாக வீடு எடுத்து திருமணம் செய்து கொள்ளாமலேயே கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் தான் ஸ்ரவானியின் நடவடிக்கை மீது கோபாலுக்கு சந்தேகம் வந்துள்ளது. அவர் வேறு யாருடனோ கள்ள உறவில் இருப்பதாக கோபால் சந்தேகப்பட்டு இருக்கிறார். வெங்கி என்பவர் உடன் பழக்கத்தில் இந்திருக்கிறார் என்று தெரிந்தவுடன் அவருடன் பழகக் கூடாது என்று எச்சரித்திருக்கிறார். ஆனால், கோபால் சொன்னதை கேட்காமல் மெசேஜ் மூலமாக வெங்கி உடன் பேசி வந்திருக்கிறார். இதனால், கோபாலுக்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அடிக்கடி அவரிடம் கேட்டு சண்டை போட்டு வந்துள்ளார்.
அதன் பின்னர் ஸ்ரவாணியை கொலை செய்து விட முடிவு எடுத்திருக்கிறார் கோபால். இதனால் கடற்கரை சாலையில் கோகுல் பார்க் பகுதிக்கு ஸ்ரவாணியை அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு சென்றதும் வெங்கியுடன் பழகுவது குறித்து கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்து ஸ்ரவாணியின் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார் கோபால். பின்னர், தானாக சென்று கஜுவாக நகரில் இருக்கும் காவல் நிலையத்தில் நடந்த விஷயத்தை சொல்லி சரணடைந்திருக்கிறார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.