நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக தவறான தகவல்களை பரப்பியதாக கைது செய்யப்பட்ட பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு பொய்யானது என தனது யூடியூப் சேனலில் பேட்டியளித்து, தவறான தகவல்களை சவுக்கு சங்கர் பரப்பியதாக நில அபகரிப்பு தடுப்பு பிரிவு காவல்துறையினர் புகாரளித்தனர்.
அதன் அடிப்படையில், அவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கடந்த டிசம்பர் 24ஆம் தேதி சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, தனக்கு ஜாமீன் வழங்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், காவல்துறை தரப்பு வழக்கறிஞர் ஆஜரானார். அப்போது, சவுக்கு சங்கர் தொடர்ந்து இது போன்று தவறான தகவல்களை அளித்து வருவதாக வாதிட்டார். இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
Read More : Saif Ali Khan | நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்திய திருடன் அதிரடி கைது..!! தட்டித் தூக்கிய போலீஸ்..!!