fbpx

‘செல்லா காசுக்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது’..!! ஆர்.பி.உதயகுமாரை நினைத்து ஆவேசப்பட்ட அண்ணாமலை..!!

திருவள்ளூரில் நேற்றைய தினம் நடைபெற்ற ’என் மண் என் மக்கள்’ யாத்திரையை தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவரிடம், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய அண்ணாமலை, “செல்லாக்காசாக இருந்து வரும் ஆர்.பி.உதயகுமாருக்கு எல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை. பணத்தை கொள்ளையடித்து 5 ஆண்டுகளுக்கு மக்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேலைகளின், தாரக மந்திரம் எல்லாம் எனக்கு தெரியாது. மீடியோ வெளிச்சத்திற்காக என்னை பற்றி பேசும் செல்லாக்காசுகளுக்கு எல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை. கடுமையான வார்த்தைய பயன்படுத்த எனக்கும் தெரியும். அவர்களுக்கு என் மீது கோபம் வருவதால், என் கட்சி சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாக அர்த்தம்” என்றார்.

மேலும், “என்னை திட்டத்திட்ட, பாஜகவும் நானும் சரியான பாதையில் செல்வதற்கான குறியீடாக எடுத்துக் கொள்கிறேன். பிரதமர் தமிழ்நாட்டிற்கு எந்த குறையும் வைக்கவில்லை. தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிவாரண நிதியை தமிழ்நாடு அரசின் பேரிடர் மேலாண்மை துறைக்கு மத்திய அரசு 1,300 கோடி ரூபாய் கொடுத்திருப்பதை எடுத்து செலவு செய்யாமல் வைத்துள்ளனர். தமிழக அரசு கேட்டுள்ள 38 ஆயிரம் கோடி வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு வழங்கும். எந்த மாநிலத்திற்கும் வெள்ள நிவாரண நிதியை அளிப்பதற்கு மத்திய அரசு குறை வைக்கவில்லை” என்றார்.

அதிமுக கதவு சாத்தப்பட்டு இருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறிய கருத்து குறித்து கேட்ட போது, ”அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் கதவை உடைத்துக்கொண்டு பாஜகவில் சேர்ந்துள்ளனர். நாங்கள் கதவைத் தட்டி எங்கேயும் போக விரும்பவில்லை. அவர்களே கதவை திறந்து கொண்டு வருகின்றனர்” என்றார்.

Chella

Next Post

மாணவர்களே..!! உங்களுக்குக்கும் 100% உதவித்தொகை..!! சென்னை ஐஐடி வெளியிட்ட வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!

Fri Feb 9 , 2024
சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்களும் பெரு நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதி கூட்டாளர்களும், பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் ரூபாய் வரை உள்ள பி டெக் மாணவர்களுக்கு 100 சதவித நிதியுதவி இரண்டு ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய-மாநில அரசுகள் மாணவர்களுக்காக அழைத்து வரும் நிதியுதவி மற்றும் கல்வி உதவித்தொகை ஆதரவுகளில் மெரிட் கம் மீன்ஸ் உதவித்தொகையும் ஒன்று. எஸ்சி/எஸ்டி மாணவர்கள் […]

You May Like