லண்டனில் ராணியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியின்போது சவப்பெட்டியை நோக்கி ஓடிய இளைஞர் ’’ அவர் உயிருடன் இருக்கின்றாரா’’ என சோதனை செய்தேன் என கோர்ட்டில் பதில் அளித்திருக்கின்றார்.
லண்டனில் ராணியின் மறைவுக்கு லட்சக்கணக்கான மக்கள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அஞ்சலி செலுத்தினர். இரவும் பகலும் வெயில் மழை என பாராமல் வந்து சவப்பெட்டி முன்பு நின்று தலை வணங்கி மரியாதை செலுத்தினர். கடந்த வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியின்போது 28 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் சவப்பெட்டி வைக்கப்பட்டுள்ள இடத்தை நோக்கி திடீரென ஓடி வந்தார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பாக மாறியது. அவரை கைது செய்த போலீஸ் .. பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு சோதனைக்கு பின்னர் சிறிது நேரம் கழித்தே அனுமதிக்கப்பட்டனர். சட்டத்தை மீறி அவர் சவப்பெட்டி வைத்திருந்த இடத்தை நோக்கி சென்றது அனைவறையும் பதற்றப்படுத்தியது.
இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. கைதான முகமது கான் என்ற இளைஞர் நீதிமன்றத்தில் கூறுகையில் ’’ ராணி உயிருடன் இருக்கின்றாரா ’’ என சோதனை செய்தேன் என்றார். முன்பு விசாரணை நடத்திய போலீஸ் குழு இவர் ராணி இறந்ததை இன்னும்ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு வித மதிமயக்கத்தில் இருக்கின்றார். மருத்துவர்கள் முன்னிலையில் சோதனைக்குட்படுத்தியபோதும் இவர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார் என சான்றளித்தனர்.
இந்த வழக்கில் நீதிபதிகள், ’’ அவர்இன்னும் ராணி இறந்ததை ஏற்றுக்கொள்ள முடியாத மாயையான ஒரு மனநிலையில்இருக்கின்றார். அவர் இறக்கவில்லை என கருதுகின்றார். மேலும் இதில் சார்லஸ் மன்னருக்கு தொடர்பு இருக்குமோ என நினைக்கின்றார். இன்னும் ராணியி உயிருடன் இருப்பதாக கருதுகின்றார்.’’ என கூறிய நீதிபதிகள் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். மேலும் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறவும் அறிவுறுத்தியுள்ளனர்.