fbpx

’பாலா படத்திற்காக இதை செய்தேன்’..!! ’கடைசியில் பரோட்டா மாஸ்டர் ஆகிவிட்டேன்’..!! சாட்டை பட நடிகரின் அவல நிலை..!!

இயக்குநர் ஃபெரோஸ் கானின் மகனான யுவன் தமிழ் சினிமாவில் 2011இல் வெளியான பாசக்கார நண்பர்கள் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். ஆனால், அதைத் தொடர்ந்து இவர் நடித்த சாட்டை திரைப்படம் தான் இவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது. யுவன் எனும் நடிகர் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தெரிய வர காரணமும் சாட்டை திரைப்படம் தான். பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த அப்பாஸ், ரவிகிருஷ்ணா உள்ளிட்ட நடிகர்களே சினிமாவில் தொடர முடியாமல் வேறு வேலைக்கு சென்று விடும் நிலையை பார்த்திருக்கிறோம்.

அதே போல ஒரு சூழ்நிலையில் தான் சினிமாவில் எப்படியாவது சாதிக்கலாம் என வந்த இளம் நடிகர் யுவன், தற்போது ஹோட்டலில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வரும் கதையை சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். சினிமாவில் இருந்து ஒரே அடியாக பரோட்டா மாஸ்டராக மாறுவதற்கு என்ன காரணம் என கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், பாலா இயக்கத்தில் ஒரு படம் நடிக்க கமிட் ஆகியிருந்தேன். அந்த படத்தின் அறிவிப்பும் வெளியானது. ஆனால், அந்த படம் கடைசியில் ஆரம்பிக்காமல் அப்படியே நின்று விட்டது. எங்கே போனாலும், பாலா சார் படம் என்ன ஆச்சு? என்றே கேட்க ஆரம்பித்து விட்டனர். அந்த படத்தில் நடிக்கத் தான் பரோட்டா தயாரிக்க கற்றுக் கொண்டேன். கடைசியில் அதுவே என் வாழ்க்கையாக மாறிவிட்டது என்றார்.

Chella

Next Post

RIP | நடிகை பூனம் பாண்டே புற்றுநோயால் திடீர் மரணம்..!! திரையுலகினர் அதிர்ச்சி..!!

Fri Feb 2 , 2024
புற்றுநோய் காரணமாக பிரபல நடிகை பூனம் பாண்டே உயிரிழந்தார். அவருக்கு வயது 32. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவரான பூனம் பாண்டே, பிரபல மாடல் அழகி ஆவார். கடந்த 2011ஆம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பை போட்டியில் வென்றால் நிர்வாணமாக மைதானத்தில் வலம் வருவேன் எனக் கூறி பரபரப்பை கிளப்பியிருந்தார். தொடர்ந்து 2013ஆம் ஆண்டு ‘நஷா’ எனும் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமான பூனம், அதன் பிறகு தனக்கென […]

You May Like