இந்த டிஜிட்டல் உலகில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாதவர்களே இல்லை என்று சொல்லலாம். உலகம் நம் கையில் என்ற வார்த்தைக்கு சரியான ஒன்றாக ஸ்மார்ட்போன் வந்துவிட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருமே பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த போன் ஆயிரங்கள் முதல் லட்சங்கள் வரை விற்பனை செய்யப்படுகிறது. இப்படி பல டெக்னாலஜியை கொண்ட போனை விதவிதமாக கையாளும் நாம், போனில் உள்ள பட்டன் ஓட்டைகள் குறித்து அறிந்திருக்கிறோமா? ஸ்மார்ட்போனில் சார்ஜ் போடும் இடத்தில் ஒரு சிறிய ஓட்டை இருக்கும். இது சில போன்களில் இருக்காது. இதேபோன்று, ஸ்பீக்கருக்காக 3-5 ஓட்டை வரை கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால், எதற்குமே சம்மந்தம் இல்லாமல் ஒரு ஓட்டை இருக்கும். அது எதற்கு என்று யாருக்காவது தெரியுமா?
நாம் போனை வைத்து பேசும் போது, மேலே கொடுக்கப்பட்டுள்ள ஸ்பீக்கர் வாயிலில் அவர்கள் பேசுவது நமக்கு கேட்கும். அதாவது, செல்பி கேமராவுக்கு அருகில் சின்னதாக இருக்கும் ஸ்பீக்கரில் தான் நமக்கு அவர்கள் பேசுவது கேட்கும். ஆனால், கீழே இருக்கும் சிறிய ஓட்டை இரைச்சலை கட்டுப்படுத்தி நமது குரலை சரியாக பிக்கப் நல்ல ஆடியோவை கொடுக்குமாம். இந்த ஓட்டை ஒரே ஒரு சத்தத்தை மட்டுமே பிக்கப் செய்யுமாம். அதனால் தான் நமக்கு கூட்டத்தில் கூட பேசுபவரின் சத்தம் தனியாக கேட்கிறது. எந்த சத்தம் அருகில் இருக்கிறதோ, எது அதிகமாக இருக்கிறதோ அதை பிக்கப் செய்து ஆப்போசிட்டில் பேசுபவர்களுக்கு தெளிவான ஆடியோவாக தருகிறது.
Read More : SBI வங்கியில் 13,735 காலிப்பணியிடங்கள்..!! மாத சம்பளம் ரூ.64,480 வரை..!! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..!!