fbpx

’அவருக்கு பயம்னா என்னனே தெரியல’..!! இந்தியாவின் தோல்விக்கு இவர்கள் தான் காரணம்..!! மனம் திறந்த ஹர்திக் பாண்டியா..!!

வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு மோசமான பேட்டிங்கே காரணம் என இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி20 போட்டி கயானா மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு, திலக் வர்மா 51 ரன்கள் எடுத்து கொடுத்தாலும், மற்ற பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற பேட்டிங்கால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி வெறும் 152 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பின்னர், 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, தனது முதல் 3 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து, தடுமாற்றத்துடன் இன்னிங்ஸை துவங்கினாலும், அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களின் நம்பிக்கையான பேட்டிங்கால் 18.5 ஓவரிலே இலக்கை எட்டிய 2 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றது. பயம் என்றால் என்னவென்றே தெரியாதது போன்று அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நிக்கோலஸ் பூரண், 67 ரன்கள் எடுத்து வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

இந்நிலையில், இந்தியாவின் தோல்வி குறித்து பேசியுள்ள கேப்டன் ஹர்திக் பாண்டியா, பேட்டிங்கில் சொதப்பியதே இந்திய அணியின் தோல்விக்கான காரணம் என தெரிவித்துள்ளார். உண்மையை பேச வேண்டும் என்றால் நாங்கள் பேட்டிங்கில் மிக மோசமாக செயல்பட்டுவிட்டோம். நான் சிறப்பாக பேட்டிங் செய்திருக்க வேண்டும். 160 – 170 ரன்கள் எடுத்திருக்க வேண்டும். நிக்கோலஸ் பூரண் மிக சிறப்பாக பேட்டிங் செய்தார். அவரது அதிரடி பேட்டிங்கால் நாங்கள் எங்களது பந்துவீச்சாளர்களை சரியாக பயன்படுத்த கூட முடியாத நிலை ஏற்பட்டது.

இரண்டு ரன்களில் 2 விக்கெட்டுகளை வெஸ்ட் இண்டீஸ் அணி இழந்திருந்த நிலையிலும், நிக்கோலஸ் பூரண் பயம் இல்லாமல் விளையாடிய விதம் பாராட்டுக்குறியது. தற்போதைய அணியில் நாங்கள் எங்களது முதல் 7 பேட்ஸ்மேன்களை நம்பியுள்ளோம். பேட்ஸ்மேன்கள் தங்களது பொறுப்புகளை உணர்ந்து விளையாட வேண்டும். அணியை பலப்படுத்த தேவையான விஷயங்களை கண்டறிய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். திலக் வர்மா மிக சிறப்பாக பேட்டிங் செய்தார். இந்த போட்டியில் அவர் விளையாடிய விதம் வெறும் 2 போட்டிகளில் விளையாடியவரை போன்று இல்லை” என்று தெரிவித்தார்.

Chella

Next Post

12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு லைசென்ஸ்..!! அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!! விண்ணப்பிப்பது எப்படி..?

Mon Aug 7 , 2023
சாலை மற்றும் போக்குவரத்து விதிகளை பள்ளியிலேயே பயின்ற மாணவர்களுக்கு பழகுநர் உரிமம் எடுக்காமலேயே நேரடியாக நிரந்தர லைசென்ஸ் வழங்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரளா அரசானது பள்ளி மாணவர்களுக்கு போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முக்கிய அறிவிப்பு ஒன்றை அமல்படுத்த உள்ளது. அதாவது, சாலை மற்றும் போக்குவரத்து விதிகளை மாணவர்களுக்கு பள்ளியிலேயே பயிற்றுவித்து, அவர்களுக்கு லைசென்ஸ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 11 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் […]

You May Like