fbpx

’சினிமா வாழ்க்கையே வேண்டாம்’..!! ’இதுதான் என்னோட ஆசை’..!! திரையுலகை விட்டு மொத்தமாக விலகும் நடிகை துஷாரா..!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக உள்ளவர் துஷாரா விஜயன். பிற மாநிலங்களில் இருந்து கோலிவுட் திரையுலகில் அறிமுகமாகும் நடிகைகள் மத்தியில், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் தான் துஷாரா. சிறு வயதில் இருந்தே நடிகையாக வேண்டும் என்கிற ஆசை இருந்ததால், சென்னை வந்து தீவிர பட வேட்டையில் ஈடுபட்டார். இதன் பலனாக கடந்த 2019ஆம் ஆண்டு ‘போதை ஏறி புத்தி மாறி’ என்ற படத்தில் அறிமுகமானார். இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாத நிலையில், இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்த ‘சார்பாட்டா பரம்பரை’ திரைப்படம் அதிகம் பேசப்பட்டது.

இப்படத்திற்கு பின்னர் ரசிகர்களால் கவனிக்கப்படும் நடிகையாக மாறிய துஷாரா, ‘நட்சத்திரம் நகர்கிறது’, ‘கழுவேத்தி மூர்க்கன்’, ‘அநீதி’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவர் நடித்த படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது. அதே போல் துஷாரா விஜயனின் நடிப்பும் அதிகம் பேசப்பட்டது. தற்போது துஷாரா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் ‘வேட்டையன்’ படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். அதே போல் தனுஷின் தங்கையாக ‘ராயன்’ படத்தில் நடித்துள்ளார். மேலும் விக்ரமுக்கு ஜோடியாக ‘வீர தீர சூரன்’ படத்தில் நடித்து வருகிறார்.

அண்மையில் தனுஷின் ராயன் பட விழாவில் கலந்து கொண்ட துஷாரா, பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சினிமாவில் தன்னுடைய ரிட்டயர்மெண்ட் எப்போது என கூறி அதிர்ச்சி கொடுத்தார். தனக்கு 35 வயது ஆன பின்னர் முழுமையாக திரையுலகில் இருந்து விலகி விடுவேன் என கூறியுள்ளார். 35 வயதுக்கு பின்னர் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய வேண்டும் என்பதுதான் தன்னுடைய கனவு என்பது போல் துஷாரா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது துஷாராவுக்கு 26 வயதே ஆகும் நிலையில், இன்னும் 9 வருடங்கள் மட்டுமே நடிப்பார் என தெரிகிறது.

Read More : பிரதமரின் வீடு கட்டும் திட்டம்..!! பணத்தை எடுத்துக் கொண்டு கள்ளக்காதலனுடன் ஓடிய 11 பெண்கள்..!! பரபர சம்பவம்..!!

English Summary

Actress Dushara Vijayan has said that she will completely leave the film industry after turning 35 years old.

Chella

Next Post

”தவெக தலைவர் விஜய்க்கு எப்போது என்னுடைய ஆதரவு இருக்கும்”..!! பிரபல நடிகை ஓபன் டாக்..!!

Tue Jul 9 , 2024
தவெக கட்சி தலைவர் விஜய்க்கு என்னுடைய ஆதரவு எப்போதுமே இருக்கும் என பிரபல நடிகை ஓபனாக கூறியுள்ளார். திருச்சியில் நடைபெற்ற அழகு நிலையம் திறப்பு விழாவில் திரைப்பட நடிகை கயல் ஆனந்தி கலந்து கொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”நடிக்கிற படங்களில் பெரும்பாலானவை கிராம கதைகளாக அமைந்துள்ளது. எனவே, நடிப்பதற்காக திருச்சி பகுதிகளுக்கு நான் அடிக்கடி வந்துள்ளேன். மன்னர் வகையறா, சண்டிவீரன் ஆகிய படங்கள் நடிக்கும் போது திருச்சி […]

You May Like