fbpx

’எனக்கு புருஷனே வேண்டாம்’..!! ’நீங்க 4 பேரு மட்டும் போதும்’..!! கணவனை போட்டுத்தள்ளிய மனைவி.!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டம் ரக்சியா பகுதியைச் சேர்ந்தவர் சிவா. இவருக்கும் மாதுரி அகிர்வார் என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்து இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், மாதுரி அகிர்வாருக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஜெய்ஹிந்த் ரகுவர், குல்தீப் சதுர்வேதி, சோடூ பரிஹார், தீன்தயாள் உள்ளிட்ட 4 பேருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இந்த விவகாரம் கணவர் சிவாவுக்கு தெரியவந்ததை அடுத்து, கணவன் – மனைவி இருவருக்கும் அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த மனைவி, மாதுரி தனது காதல் வாழ்க்கைக்கு கணவர் தடையாக இருப்பதாக நினைத்து தனது கள்ளக்காதலர்கள் 4 பேருடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். அதன்படி அவர்கள் சிவாவை அழைத்துச் சென்று மது விருந்து கொடுத்து போதை தலைக்கேறியதும் அடித்துக் கொடூரமாக கொலை செய்துள்ளனர். இந்த கொலை சம்பவம் சிவாவின் சகோதரருக்குத் தெரிய வர அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், போலீசார் சிவாவின் மனைவி மற்றும் அவரது காதலர்கள் 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

’நாயகன்’ படத்தில் கமலின் மகளாக நடித்த கார்த்திகா..!! இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க..!!

Tue Apr 18 , 2023
கமல்ஹாசன் நடித்த படங்களில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் ஒரு திரைப்படம் நாயகன். இப்படத்தில் கமல்ஹாசன் மகளாக நடித்திருந்தவர் தான் கார்த்திகா. 80-களில் மலையாளத்தில் இருந்த டாப் நடிகைகளில் இவரும் ஒருவராக இருந்துள்ளார். அங்கு பிரபலமாக அப்படியே தமிழில் நாயகன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க அப்படத்திலும் நடித்து மக்களின் மனதை வென்றார். சினிமாவில் தொடர்ந்து சிறப்பாக நடித்துக் கொண்டிருக்கும் போதே திருமணம் செய்துகொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டார். 1988ஆம் ஆண்டு […]
நாயகன் படத்தில் கமலின் மகளாக நடித்த கார்த்திகா..!! இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க..!!

You May Like