fbpx

‘என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா’ என்பது போல, என் கணவர் பிக்பாஸ் போனதை உணர்கிறேன்!… மலேசிய வாசுதேவனின் மருமகள்!

ஜனகராஜ் சொல்வது மாதிரி, ‘என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா’ என்பது போல தான், கணவர் பிக்பாஸ் போனதை உணர்கிறேன். அவர் போனதும் என்னோடைய கிச்சன் மூடியாச்சு என்று மலேசிய வாசுதேவனின் மருமகள் விஜித்ரா சுவாரஸியமாக பேட்டியளித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அந்தவகையில் பிக்பாஸ் 7வது சீசன் அக்டோபர் 1ம் தேதி முதல் தொடங்கியது. இதுவரை ஒரு வீட்டில் நடந்துவந்த பிக்பாஸ் இந்த சீசனில் இரண்டு வீடுகளில் நடைபெறகிறது. ஒரு வீடுனாலே கண்ட்டெண்ட்டுக்கு பஞ்சம் இருக்காது தற்போது இரண்டு வீடுகளில் நடைபெறவிருப்பதால் பிக்பாஸ் வீட்டில் பஞ்சாயத்துக்கு பஞ்சமே இருக்காது என்று ரசிகர்கள் பேசிவருகின்றனர். போட்டியாளர்களை தேடி தேடி செலக்ட் செய்திருப்பதாக கூறப்பட்டுள்ள நிலையில், 18 கொண்ட போட்டியாளர்கள் இடம்பிடித்துள்ளனர். அதில், 14வது போட்டியாளராக களமிறங்கியுள்ள நடிகரும், பாடகருமான யுகேந்திரன், மலேசிய வாசுதேவனின் மகன் ஆவார். பகவதி, பூவெல்லாம் உன்வாசம், யூத், திருப்பாச்சி, உள்ளிட்ட ஏராளமான படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்.

இந்தநிலையில், யுகேந்திரன் பிக்பாஸ் சென்றது குறித்து, அவருடைய மனைவி விஜித்ரா, யூடியூப் சேனல் ஒன்றுக்கு சுவாரஸ்யமாக பேட்டியளித்துள்ளார். ஜனகராஜ் சொல்வது மாதிரி, ‘என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா’ என்பது போல தான், அவர் பிக்பாஸ் போனதை உணர்கிறேன். என்னோடைய கிச்சன் மூடியாச்சு. அவருக்கு வகையான உணவுகள் தர வேண்டும். சாம்பார், சிக்கன், பொரியல் , சாதம் வைக்க வேண்டும் அவருக்கு. பசங்களுக்கு அதெல்லாம் தேவையில்லை. அவர் சென்றதால் என் வீட்டு கிச்சன் மூடப்பட்டுள்ளது.

போன சீசனில் அவருக்கு இந்த வாய்ப்பு வந்தது. அவர் போக முடியாமல் போனது. இந்த சீசனில் வந்த போது, கையை இதயத்தில் வைத்துக் கொண்டார். ‘எனக்கு படபடனு இருக்கு அம்மு’ என்றார். ஏன் என்று கேட்டேன், எனக்கு பயமாகிவிட்டது, அவருக்கு ஸ்ட்ரோக் எதுவும் வந்துவிட்டதோ என்று. பிக்பாஸ் வீட்டுக்கு போவதை நினைத்து’ என்றார். பிக்பாஸ் வீட்டில் நடப்பதை ஒன்றரை மணி நேரம் காட்டுவார்கள். எடிட்டிங் டீம் கிரியேட்டிவ்வா எதை காட்டுகிறார்களோ, அப்படி தான் குணாதிசயங்கள் வெளிப்படும், அதை தான் நாமும் விமர்சிப்போம்.

அதை வைத்து யாருடைய குணத்தையும் எடை போட முடியாது. விரல் விட்டு எண்ணும் அளவில் தான், குணத்தை காப்பாற்றியவர்கள் உண்டு. 106 நாள் என்பதை மனதில் வைத்தால், உங்களுக்கு சிக்கலாகிவிடும், இரண்டு வாரம் என்று நினைத்து கொள்ளுங்கள் என்று கூறினேன். நான் சிங்கப்பூர், அவர் இந்தியர். இருவரின் கலாச்சாரம் வேறு. நாங்கள் இருவரும் குடும்பம் நடத்துவது சவாலானது தான். அவர் பயங்கர பாசிட்டிவ். ‘அதெல்லாம் சரியாகிடும் அம்மு’ என்று எல்லாவற்றையும் கடந்து போவார்.

அவர் என்னுடைய கணவர் மட்டுமல்ல, என்னுடைய சிறந்த நண்பர். நாங்க கதை பேசிக் கொண்டே இருப்போம். எங்களுக்கு பேச நிறைய இருக்கும். தூங்குவதற்கு முன், குறைந்தது அரை மணி நேரம் விளையாடுவோம். இப்போ அவருடைய போன்களும் என்னிடம் இருக்கிறது. நிறைய அழைப்புகள் வருகிறது. அவற்றை கையாள்வதே பெரிய சவாலாக உள்ளது. என்னிடம் ஒப்படைத்துவிட்டு, அவர் உள்ளே ஜாலியா இருக்கார் என்று சுவாரஸியமாக பேசியுள்ளார்.

Kokila

Next Post

டிகிரி முடித்த நபர்களுக்கு மாதம் ரூ.40,000 ஊதியம்...! தனியார் வங்கியில் வேலைவாய்ப்பு அறிமுகம்...!

Tue Oct 3 , 2023
HDB Financial Service வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Branch sales Manager பணிகளுக்கு என ஒரு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 50 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவமாக 2 முதல் 5 ஆண்டுகள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியம் […]
இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! தனியார் வங்கிகளில் வேலைவாய்ப்பு..!! என்ன செய்ய வேண்டும்..?

You May Like